ஜார்ஜியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு.. போராடியவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த போலீசார்..!

ஜார்ஜியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்த நிலையில், அதிலிருந்து பெண் ஒருவரை, சக போராட்டக்காரர்கள் அரணாக நின்று காப்பாற்றினர். ஜார்ஜியாவில் தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜார்ஜியா இணைவதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறி, அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் பிலிசியில் உள்ள நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் … Read more

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கு தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினராக உள்ள கவிதாவிடம், கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில், நாளை அமலாக்கத்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக கவிதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண்பிள்ளையின் … Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்: மார்ச் 08 2023

இலங்கை மத்திய வங்கி இன்று (08-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 77 சதம் – விற்பனை பெறுமதி 331 ரூபா 05 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 63 சதம் – விற்பனை பெறுமதி 392 ரூபா 39 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 19 சதம் – விற்பனை பெறுமதி 349 ரூபா 99 … Read more

மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!

சென்னை: மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார். பாஜக ஐடி விங்கைச் சேர்ந்த பலர் அங்கிருந்து விலகி எடப்பாடி கட்சிக்கு சென்றுள்ள  நிலையில், அதுகுறித்து மாநில பாஜக விமர்சனம் செய்தது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய முடிவுகளில் பாரபட்சமும் இருக்காது தலைவர்கள் முடிவெடுப்பதில் நான்கு பேர் கோபித்துக் கொண்டு வெளியே போக தான் செய்வான். அண்ணாமலையான நான் லீடர் … Read more

கோவையில் மகளிர் தின நிகழ்ச்சியில் மண் காப்போம் இயக்கம் சார்பாக தமிழ்க்கல்லூரியில் நூற்றுக்கணக்கான பெண்கள் உற்சாக பங்கேற்பு

கோவை: உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் இன்று நடந்த ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே’ என்ற நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனத்தின் அருள்திரு மருதாசல அடிகளார் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் ‘பேரூர் ஆதீனம் ஈஷாவுடன் இணைந்து பல வருடங்களாக பல்வேறு செயல்களை செய்து வருகிறது. சத்குரு அவர்கள் முன்னெடுத்துள்ள பல அற்புதமான திட்டங்களில் சிறப்பானதொரு திட்டம் இந்த … Read more

பட்டினச்சேரி மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: நாகை பட்டினச்சேரி மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கச்சாஎண்ணெய் குழாய் உடைப்பால் கடல்மாசு ஏற்பட்டு பாதித்த மீனவர்களுக்கு இழப்பீடு தரவேண்டும் எனவும் கச்சா எண்ணெய் குழாயை முற்றிலும் அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முறை தவறிய உறவால் வந்த வினை; கணவருக்கு சைலன்சரால் சூடு வைத்து தலையில் சிறுநீர் கழித்து சித்ரவதை: மனைவி, ஆட்டோ டிரைவர் கைது

திருமலை: கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், அவர்கள் இறந்துவிட்டதாக முகநூலில் பதிவு செய்தார். ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், ஆட்டோ டிரைவருக்கு சூடு வைத்து, தலையை மொட்டை அடித்து சிறுநீர் கழித்து கொடுமை செய்துள்ளார். இதையடுத்து ஆட்டோ டிரைவரின் மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஏ.ரங்கம்பேட்டையை சேர்ந்தவர் வம்சி (30). ஆட்டோ டிரைவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமான தெலங்கானா மாநிலம் கரீம் … Read more

பாடகிகளாக சத்யாவின் மகள்கள்

இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்ட இசை அமைப்பாளர் சத்யா “பெண்ணே பெண்ணே” என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை அவரது மகள்கள் சினேகா மற்றும் வைமு ஆகியோர் பாடியுள்ளனர். இது குறித்து இசையமைப்பாளர் சி சத்யா கூறும்போது, “இது மகளிர் தினத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல். பொதுவாக, பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை போற்றுவது பற்றி இந்த சமூகம் அடிக்கடி பேசுகிறது. ஆனால், அனைத்தும் வாய்மொழியாக மட்டுமே இருக்கிறது. உண்மையில், பெண்கள் … Read more

கேரளா: எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாக்குவாதம்; சக பயணியை கீழே தள்ளி விட்டு கொன்ற தமிழக நபர்

கோழிக்கோடு, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கோயிலண்டி பகுதியில் ரெயில் தண்டவாள பகுதியில் கிடந்த 25 வயது ஆடவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் மலபார் எக்ஸ்பிஸ் ரெயிலில் பயணித்த இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் மோதல் முற்றியதில், சக பயணியை ஒருவர் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்ட பகுதியை … Read more