திரிபுராவில் இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் மாணிக் சாஹா..!

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மாணிக் சாஹா இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். கடந்த மாதம் நடைபெற்ற திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தலைநகர் அகர்தலாவிலுள்ள விவேகானந்தர் மைதானத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். முதலமைச்சர் மாணிக் சாஹா மற்றும் 8 … Read more

அத்திக்கடவு – அவிநாசி திட்ட சோதனை முடிந்ததும் முதலமைச்சர் தொடங்கி வைப்பார்! அமைச்சர் முத்துசாமி தகவல்…

ஈரோடு: அத்திக்கடவு-அவிநாசி திட்ட சோதனை முடிந்ததும் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். ஈரோடு, ரங்கம்பாளையத்தில் கூட்டுறவு துறை சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய ரேஷன் கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். … Read more

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: குளித்தலை அருகே தோகைமலை அதிமுக ஒன்றிய குழு தலைவர் பதவிநீக்கம்..!!

கரூர்: குளித்தலை அருகே தோகைமலை அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் ஒன்றிய குழு தலைவர் லதா ரங்கசாமி பதவிநீக்கம் செய்யப்பட்டார். ஒன்றிய குழு தலைவரின் கணவர் ஒன்றிய குழு பொது நிதியை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அரசு நிர்வாகத்தில் அவரது தலையீடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறி ஒன்றிய தலைவரின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

நிஷாந்த் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்

சென்னை: சென்னை போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிஷாந்த் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிஷாந்த் தந்தை, தாய் தலைமறைவாக உள்ளதால் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ம.பி. முதலமைச்சரின் பாதுகாப்பு பணியை முழுக்க கையாண்ட பெண்கள் : சிறப்பு டூடுல், மணல் சிற்பம் உருவாக்கி மகளிருக்கு கவுரவம்..!!

மராட்டியம்: நாடு முழுவதும் இன்று சர்வதேச தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மராட்டிய மாநிலம் நாக்பூர் குடும்ப நீதிமன்றம் சார்பில் 2017-ம் ஆண்டு முதல் பெண்களுக்கு இலவச தொழில்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், தனித்து விடப்பட்ட பெண்கள் இதனால் பயன்பெற்று வருகின்றன. கைவினை பொருட்கள் தயாரிப்பு, அழகு கலை உள்ளிட்ட பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தையொட்டி இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. … Read more

தெலுங்குப் படத்தில் நடிக்க ஜான்விக்கு இவ்வளவு சம்பளமா?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். ஹிந்தியில் சில படங்களில் நடித்திருந்தாலும் அங்கு இன்னமும் முன்னணி நடிகைகள் பட்டியலில் அவர் இடம் பெறவில்லை. ஆனாலும், அவரை தெலுங்கு, தமிழில் நடிக்க வைக்க சிலர் தொடர்ந்து முயற்சித்தார்கள். கடைசியாக ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள அவரது 30வது படத்தில் ஜான்வியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இப்படத்திற்காக ஜான்விக்கு சம்பளமாக 5 கோடி வழங்கப்படுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முன்னணி நடிகைகளின் சம்பளமாக அதிகபட்சமாக 3 கோடி … Read more

என்னை கொல்ல மீண்டும் முயற்சி தலைமை நீதிபதிக்கு இம்ரான் கடிதம்| Imrans letter to the Chief Justice is another attempt to kill me

இஸ்லாமாபாத்:’என் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, நான் படுகொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்’ என, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் வாயிலாக வேண்டுகள் விடுத்து உள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்த போது, பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் அவருக்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை அளித்தனர். அந்த பரிசுப் பொருட்களை … Read more

இடியுடன் கூடிய மழை ,பலத்த காற்றும்  வீசக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 மார்ச்08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச் 08ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் கிழக்குமற்றும்ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் திருகோணமலை,ஹம்பாந்தோட்டை … Read more

பாலியல் வன்கொடுமை குறித்து குழந்தைகள் பொது வெளியில் பேச வேண்டும்: குஷ்பு

பாலியல் வன்கொடுமை குறித்து குழந்தைகள் பொது வெளியில் பேச வேண்டும்: குஷ்பு Source link