127 கிலோ வெள்ளியை காருடன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை 20 பேர் கைது..!

சேலத்தில் காருடன் சேர்த்து 127 கிலோ வெள்ளிக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சேலத்தை சேர்ந்த, ஷாந்தராஜூ ஜகத்தலே என்பவர் ராய்ப்பூரில் இருந்து வெள்ளிக்கட்டிகளை வாங்கிக் கொண்டு வந்தபோது, இரண்டு கார்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெள்ளிக்கட்டிகளுடன் காரையும் சேர்த்து கொள்ளையடித்து சென்றது. ஓமலுர் போலீசார் ஏற்கனவே, 14 பேரை கைது செய்து 7 கிலோ வெள்ளிக்கட்டிகளை பறிமுதல் செய்த நிலையில், தீவிர தேடலில் மேலும் 6 பேரை … Read more

சேலம் மாவட்டத்தில் 149 குழுக்கள் மூலம்  6 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி

சேலம்: சேலம் மாவட்டத்தில் 149 குழுக்கள் மூலம் 6 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம், கொண்டநாயக்கன்பட்டி சத்யா நகர், முனியப்பன் கோவில் பகுதியில் கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் அனைத்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். இதுகுறித்து ஆட்சியர் கார்மேகம் கூறியது: “சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் சார்பில் … Read more

பிபிசி விவகாரம் குறித்து ஜெய்சங்கரிடம் பேசினேன்: இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்

புதுடெல்லி: இந்தியாவில் பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார். ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி இந்தியா வந்துள்ளார். மாநாட்டின் இடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, ஜேம்ஸ் கிளவர்லி சந்தித்து உரையாடினார். அப்போது, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த மாதம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை … Read more

தேசிய அரசியலில் கால் பதிக்க ஸ்டாலினை வரவேற்கிறோம்; அகிலேஷ் யாத்வ் பேச்சு.!

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் பிறந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் , பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகிய முக்கிய எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதனாத்தில் பிறந்த நாள் விழா மாநாடு நடைபெற்றது. … Read more

MK Stalin Birthday: நண்பர் ஸ்டாலினுக்கு ரஜினி, கமல் வாழ்த்து: ரஜினி சொன்ன அந்த மேட்டர் அல்டி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் #HBDMKStalin70 #திராவிட நாயகன் ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றன. ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு ஒரு நாளுக்கு முன்பே வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் … Read more

ரஷ்ய கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா.. இந்திய சந்தையை விரிவாக்கம் செய்ய ரஷ்யா விருப்பம்..!

இந்தியாவை விட தினமும் சராசரியாக 4 லட்சத்து 50,000 பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய்யை கூடுதலாக சீனா இறக்குமதி செய்துவந்தாலும், இந்திய சந்தையை விரிவாக்கம் செய்யவே ரஷ்யா விரும்புவதாக வணிகத்துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடையை சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும், சீனாவும் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவருகின்றன. சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சொந்த கப்பல்கள் மூலம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை கொண்டு வரும் நிலையில், இந்தியாவிற்கோ, ரஷ்ய நாட்டு சரக்கு கப்பல்கள் … Read more

சூப் பானையில் கொதித்த மொடல் அழகியின் மண்டை ஓடு., அதிர்ச்சியில் பொலிஸ்

கொலை செய்யப்பட்ட ஹொங்ஹொங் மொடலின் காணாமல் போன மண்டை ஓட்டை சூப் பானையில் பொலிஸார் கண்டுபிடித்தனர். காணாமல் போன மொடல் அழகி ஹொங்ஹொங்கை சேர்ந்த 28 வயது மொடலும் சமூக வலைதள பிரபலமுமான அப்பி சோய் (Abby Choi) கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போனார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, நகரின் தை போ மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் குளிர்சாதன பெட்டியில் அவரது சிதைந்த உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதிகாரிகளின் கூற்றுப்படி, வீட்டில் மின்சார ரம்பம், இறைச்சி … Read more

முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு… ஆனால்…?

டெல்லி: முகேஷ் அம்பானி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு  உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்தியஅரசுக்கு  உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு – செலவை அம்பானி குடும்பமே ஏற்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. நமது நாட்டில், குடியரசுதலைவர், பிரதமர், முதல்வர் உள்பட  முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு நாட்டின் உயரிய பாதுகாப்பான இசட், எக்ஸ், ஒய் வகையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதில் ஒவ்வொரு வகையான பாதுகாப்புக்கும், தனித்தனியான … Read more

கொள்ளிடம் அருகே கடலில் விடப்பட்ட 1,000 ரெட்லி ஆமை குஞ்சுகள்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே 1,000 ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர். மீனவர்களின் நண்பன் என அழைக்கப்படும் ஆலிவர் ரெட்லி ஆமைகள், கடலில் உள்ள  கழிவுகளை தின்று மீன்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள  அரிய வகையான ஆலிவர் ரெட்லி ஆமைகள் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை  தமிழக கடற்கரைகளுக்கு வந்து முட்டையிட்டு மீண்டும் கடலுக்குச் சென்று  விடும். இந்த முட்டைகளை நாய், மனிதர்களிடமிருந்து பாதுகாக்க மயிலாடுதுறை  மாவட்ட வனத்துறையினர் … Read more

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் வருகை புரிந்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சென்னை வந்தடைந்தார்.