Election Results 2023: நாளை வெளியாகும் 3 மாநில தேர்தல் முடிவுகள்..! எப்படி? எங்கு பார்ப்பது?
நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைகளுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. திரிபுரா சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 16 ஆம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்றங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதியும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இந்த 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 2 ஆம் தேதியான நாளை வெளியாகிறது. பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட இருக்கின்றன. … Read more