ரயில் தண்டவாளத்தில் குறுக்கே நின்ற மக்னா யானை; நொடிபொழுதில் காப்பாற்றிய வனத்துறை: வீடியோ வைரல்…!

கோவை: கோவையில் வனத்துறையினருக்கு ஆட்டம் காட்டிவந்த மக்னாயானை ரயில் தண்டவாளத்தில் நின்ற போது வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு நொடிப்பொழுதில் யானையை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக கூறி தர்மபுரி பகுதியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை கடந்த ஐந்தாம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. இதனை அடுத்து ஆறாம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை அங்கிருந்து கீழே இறங்கி சேத்துமடை உள்ளிட்ட பகுதியில் சுற்றி … Read more

மதுரை சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 பேர் மூச்சுத்திறனல்

மதுரை: மதுரை சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 பேர் மூச்சுத்திறனல் ஏற்பட்டு மருத்துவனமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை சரவணா ஸ்டோர் கடையின் 9-வது தளத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தீ எரிந்து வருகிறது

ஆஸ்கர் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கிட்டும் பெருமை: விழா மேடையில் அரங்கேற்ற உள்ள 'நாட்டு நாட்டு'பாடல்

டெல்லி: ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலை நேரடியாக அரங்கேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்று பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. மார்ச் 13ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும் அப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான போட்டியில் உள்ளது.  இப்பாடல் நிச்சயம் ஆஸ்கர் வெல்லும் என படக்குழுவினர் நம்பிக்கை … Read more

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது?: பரூக் அப்துல்லா| Why CM Stalin should not be PM candidate?: Farooq Abdullah

ஸ்ரீ நகர்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது? என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ப்ரூக் அப்துல்லா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், எதிர்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தபின் பிரதமர் தேர்வு பற்றி முடிவெடுக்கலாம். முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சிகளை ஒருங்கிணைந்த முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியுள்ளார். ஸ்ரீ நகர்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது? என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ப்ரூக் அப்துல்லா கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், எதிர்கட்சிகள் … Read more

50 லட்சம் அப்பாச்சி பைக்குகளை விற்ற டிவிஎஸ் மோட்டார்

கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் மோட்டார் அப்பாச்சி பைக்குகள் தற்போது 160cc முதல் 310cc வரையிலான மாறுபட்ட பிரிவுகளில் 60க்கு மேற்பட்ட நாடுகளில் 50 லட்சத்துக்கு அதிகமான வாகனங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபரில் 4 மில்லியன் யூனிட் விற்பனை மைல்கல்லை கடந்த நிலையில் 27 மாதங்களுக்குப் பிறகு உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ரோட்ஸ்டர் பிரிவில் அப்பாச்சி ஆர்டிஆர் 160, … Read more

சிறு போக பயிர் செய்கைக்கு தேவையான உரத்தை ,தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்காக விவசாயத்துறை மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே  அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்..அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… மூன்று போகங்களுக்குப் பிறகு இம்முறை TSP … Read more

நட்பு குறித்து பிரபல இயக்குநர் உருக்கமான பதிவு!!

பிரபல இயக்குநரும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் நட்பு குறித்து உருக்கமாக தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநரான செல்வராகவன் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம். இவரது துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் எவர்கிரீன். இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘நானே வருவேன்’ படத்தை இயக்கியிருந்தார். இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். … Read more

நூலிழையில் உயிர்தப்பிய யானை… பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

கோவையில் ரயில் வரும் போது தண்டவாளத்தை கடந்த யானை ஒன்று நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் ஒற்றை மக்னா யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில், அந்த மக்னா யானை கும்கி யானை உதவியுடன் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மக்னா யானை, பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அந்த யானை … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

காலை 8 மணிக்குத் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை! ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவானது, இரவு 9:30 மணி வரை நீடித்தது. எந்தவித சலசலப்பு, சச்சரவுகளுமின்றி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாளைய தினம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, … Read more

குரூப்-2 தேர்வை ரத்து செய்து மறுத்தேர்வு நடத்துவதே நம்பகத்தன்மையை உறுதி செய்யும்: முத்தரசன்

சென்னை: “குழப்பமும், குளறுபடிகளும் நிறைந்த குருப்-2 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவதுதான் தேர்வாணையத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப்-2 தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் இரண்டாம் நிலை அலுவலர்கள் முக்கியத்துவம் வாய்ந்த கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியவர்கள். இதற்கான தேர்வு மிகுந்த கவனத்துடன் … Read more