கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் | பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை தொடக்கிவைத்தார் ஜெ.பி.நட்டா

காமராஜ்நகர்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று தொடங்கிவைத்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: தற்போதைய கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்கு முன்பாக, தேர்தல் நடத்தி புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். எனவே, கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்ற நிலை உள்ளது. விஜய சங்கல்ப யாத்திரைகள்: இந்நிலையில், இந்த தேர்தலை … Read more

எப்போதுமில்லா உயர்வு | பாகிஸ்தானில் பிப்ரவரி மாத பணவீக்கம் 31.6% ஆக உயர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பணவீக்கம் முன் எப்போதுமில்லாத அளவாக பிப்ரவரி மாதத்தில் 31.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் இறக்குமதி மிகப் பெரிய அளவில் குறைந்திருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், பல்வேறு பொருட்களின் விலையும், சேவைக் கட்டணமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கராச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் பிரபல வணிக நிறுவனமான ஆரிப் ஹபிப் கார்பரேஷன், பாகிஸ்தானின் நுகர்வோர் விலை குறையீடு குறித்த புள்ளி விவரங்களை … Read more

வரிச்சூரான் வகையறா: ரிட்டயர்டு ரவுடி வரிச்சியூர் செல்வம் எடுக்கும் படம் எப்ப ரிலீஸ்?

வரிச்சியூர் செல்வம். இந்த பெயரை கேட்டதும் கழுத்து மற்றும் கைகளில் கிலோ கணக்கில் போட்டிருக்கும் நகைகள் தான் நினைவுக்கு வரும். எதற்காக இவ்வளவு நகை என்ற கேள்வி கேட்டால், ஓர் அடையாளத்திற்காக என்கிறார். கலைஞர் என்றால் பேனா, எம்.ஜி.ஆர் என்றால் தொப்பி, வரிச்சியூர் செல்வம் என்றால் நகை எனச் சொல்ல வேண்டும். அதற்காகத் தான் எனக் கூறியுள்ளார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் என பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. டேஞ்சர் ரவுடி … Read more

கர்நாடக தேர்தல் 2023: தேவகவுடா குடும்பத்தில் டமால்… ஹாசன் சீட்டுக்கு வெடித்த சண்டை!

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை (மார்ச் 2) வெளியாகவுள்ளன. அடுத்த சில வாரங்களில் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிறது. ஏப்ரல் – மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக களம் மாறியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கணக்குகள் இருந்தாலும் தற்போதைக்கு நிலைமை இப்படித்தான். இதில் குடும்ப ஆட்சி … Read more

Nayanthara: விக்னேஷ் சிவனுக்காவது ஒன்னு தான், நயன்தாராவுக்கு இரண்டு: நேரமே சரியில்லையோ

Nayanthara movies: நயன்தாராவுக்கு நடந்திருப்பதை பார்த்த ரசிகர்களோ, இதுக்கு விக்னேஷ் சிவனே பரவாயில்லை போன்று என்கிறார்கள். வாடகைத் தாய்நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடந்தது. திருமணமான கையோடு இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். வாடகைத் தாய் மூலம் பிள்ளைகள் பெற்றுக் கொண்டதால் சர்ச்சையில் சிக்கினார்கள். வாடகைத் தாய் சர்ச்சை ஓய்ந்த பிறகு விக்னேஷ் சிவனுக்கு கெரியரில் பெரிய அடி விழுந்தது. ஏ.கே. 62தனக்கு மிகவும் பிடித்த … Read more

வெளிநாட்டினருக்கு ஹாங்காங் செல்ல 5 லட்சம் இலவச விமான டிக்கெட்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக ஹாங்காங் அறிவித்துள்ளது. இதற்காக, தங்கள் நாட்டிற்குள் வருவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தியுள்ள ஹாங்காங் அரசு, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம் மற்றும் கம்போடியா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இச்சலுகையை அறிவித்துள்ளது. இதற்காக, கொரோனா காலத்திலேயே விமான டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி விட்டதாக தெரிவித்துள்ள ஹாங்காங், தங்கள் நாட்டிற்கு வருவோர் குறைந்தபட்சம் 2 … Read more

மத்திய பிரதேசத்தில் ரயிலில் குண்டுவெடித்தது தொடர்பான வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை..!

மத்திய பிரதேசத்தில் ரயிலில் குண்டுவெடித்தது தொடர்பான வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் போபால் – உஜ்ஜயின் ரயிலில் குண்டுவெடித்ததில் 10 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட விசாரணையின்படி, லக்னோ பகுதியில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், ஆயுதங்கள், ஐ.எஸ். இயக்க கொடி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து, முகமது ஃபைசல் என்பவனை கைது செய்த என்.ஐ.ஏ., ரயில் குண்டுவெடிப்பிற்கும் அவனுக்கும் இருந்த … Read more

சீனா-ரஷ்யா உறவுகளுக்கு ஆணையிட அமெரிக்காவுக்கு உரிமை இல்லை! கொந்தளித்த சீனா

ரஷ்யாவுக்கு உதவினால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்த நிலையில், எங்களுக்கு ஆணையிட உரிமை இல்லை என சீனா பதிலடி கொடுத்துள்ளது. சி.ஐ.ஏ இயக்குனர் குற்றச்சாட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஊடகத்திடம் பேசிய சி.ஐ.ஏ இயக்குனர் பில் பர்ன்ஸ், ‘உக்ரைனுடனான மோதலில் ரஷ்யாவுக்கு ராணுவ ரீதியாக உதவும் வகையில், ஆபத்தான உபகரணங்களை வழங்க சீனாவின் தலைமை பரிசீலித்து வருவதாக நாங்கள் நம்புகிறோம்’ என குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், அவரது இந்தக் குற்றச்சாட்டை சீனா மறுத்தது. அத்துடன் ரஷ்யா-உக்ரைன் … Read more

பிளஸ்1, பிளஸ்2 மாணாக்கர்களுக்கு 3ந்தேதி ஹால்டிக்கெட் விநியோகம்…

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், பிளஸ்1, பிளஸ்2  பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு மார்ச் 3ந்தேதி ஹால்டிக்கெட் விநியோகிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. ஹால்டிக்கெட்  இணையத்தில்  இருந்து பதிவிறக்கம் செய்து கொடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த  பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 13, 14ம் தேதிகளில் பொதுத் தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் முதற்கட்டமாக, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை … Read more

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் திடீர் தீ விபத்து: ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்..!!

மதுரை: மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில், 6 லட்சம் சதுர அடி கொண்டு பிரம்மாண்டமாக சரவணா ஸ்டோர்ஸ் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் சுமார் 60 ஆயிரம் சதுர அடி என்கிற அளவில் 10 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1000 கார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இந்த கட்டிடத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கீழ் … Read more