திருமண அழைப்பிதழில் மிளிரும் தமிழ் மீதான காதல்: சபாஷ் போடவைத்த குடும்பம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிருந்தாவன் நகர் செவன் ஹில்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்திரன். இவருக்கு வயது 61. இவர் முன்னாள் பஞ்சு ஆலை தொழிலாளி. இவரது மனைவி ரெங்கநாயகி(55) அரசுபள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்த தம்பதிக்கு குயில்மொழி, முகிலன் என ஒரு மகள் மகன் உள்ளனர். முகிலன் அயர்லாந்து நாட்டில் பணிபுரிகிறார். அடுத்த மாதம் 10-ம் தேதி  முகிலனுக்கும், சேலம் மாவட்டம்  சின்ன திருப்பதியை சேர்ந்த நித்ய சுபாசினி என்பவருக்கும், சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது. … Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்: மார்ச் 01 2023

இலங்கை மத்திய வங்கி இன்று (01-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,   அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபா 72 சதம் – விற்பனை பெறுமதி 362 ரூபா 95 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421 ரூபா 81 சதம் – விற்பனை பெறுமதி 438 ரூபா 07 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 62 சதம் – விற்பனை பெறுமதி 385 ரூபா … Read more

இந்தியா ஸ்டார்ட்அப் வளர்ச்சியில் 3-வது இடம்: சென்னை ஐ.ஐ.டியில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் பேச்சு

சென்னை: தமிழ்நாடு வருகை தந்துள்ள  துணைத் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்  ஐ.ஐ.டி வளாகத்தில் சென்டர் ஃபார் இன்னோவேஷன் (சிஎஃப்ஐ) மையத்தை வைத்தார். நிகழ்ச்சியில் பேசியவர்,  இந்தியா ஸ்டார்ட்அப் வளர்ச்சியில் 3-வது இடத்தில் உள்ளதாக கூறினார்.  முன்னதாக அவரை சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வரவேற்றனர். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் ஃபார் இன்னோவேஷன் (சிஎஃப்ஐ) கண்டுபிடிப்புகள் வசதி மையத்தை துணைத் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தார். முன்னதாக சென்னை … Read more

மேற்கூரை இடிந்து விழுந்தது அரசு பள்ளி மாணவி காயம்

சங்கராபுரம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மாணவி படுகாயமடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறையில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததில் மாணவி சுபிஸ்னாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வகுப்பறையில் இருந்து மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் வெளியேற்றினர். மாணவி சுபிஸ்னாவுக்கு சிகிச்சை … Read more

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் அஷ்வின்!

துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி அஷ்வின் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: தமிழ்நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுள், நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துவதாக மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

டில்லிக்கு புதிதாக 2 அமைச்சர்கள்: கவர்னருக்கு பரிந்துரைத்த கெஜ்ரிவால்| 2 new ministers for Delhi: Kejriwal nominated for Governor

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லிக்கு புதிதாக 2 அமைச்சர்களை நியமிக்க, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னருக்கு இன்று(மார்ச் 1) பரிந்துரை செய்துள்ளார். புதுடில்லி துணை முதல்வர் பதவியில் இருந்து மணீஷ் சிசோடியா, நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார். மேலும், கெஜ்ரிவால் அமைச்சரவையில் அங்கம் வகித்து வரும் சத்யேந்திர ஜெயின் பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் … Read more

பயிற்சி கால ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க கோரிஅரசு கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பெங்களூரு- பெங்களூரு ஹெப்பால் பகுதியில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் மருத்துவ மாணவர்கள் 250-க்கும் மேற்பட்டோர் பயிற்சிகால ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க கோரி போராட்டம் நடத்தினர். இதில் பீதர், ஹாசன், சிவமொக்கா மற்றும் கதக் மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது அவர்கள், ‘கால்நடை மருத்துவ படிப்பின்போது இறுதி ஆண்டில் முதல் 6 மாதங்கள் வெளிமாவட்டங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதனை தொடர்ந்து … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடக்கம்

இந்தூர், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் தக்க வைத்தது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் … Read more

ஆஸ்திரேலிய ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை – போலீசார் அதிரடி

சிட்னி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்கிழமை) வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, அந்த நபர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார். இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் என்று போலீசார் விசாரணை … Read more