சென்னை, புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கான இறுதி ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு

சென்னையில் வெள்ள பாதிப்பை குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக்குழுவின் இறுதி அறிக்கையை, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, முனைவர் வெ.திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட, வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. மழைநீர் தேங்கா வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில், அதன் … Read more

பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்க தலைமை ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஸ் வேண்டுகோள்

சென்னை: முன்னாள் மாணவர்களை இணைந்து பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தமிழக பள்ளிக் கல்வி துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைமையாசிரியராகிய உங்களாலும், பணிபுரியும் ஆசிரியர்களாலும்தான் உங்கள் பள்ளி இயங்குகிறது. நீங்களே உங்கள் பள்ளியின் தூணாக இருக்கிறீர்கள். உங்கள் பள்ளியில் நேற்றைய மாணவர்கள் இறுதியாண்டு முடித்துச் சென்றுவிட்டனர். இன்றிருக்கும் மாணவர்கள் நாளை சென்று விடுவர். ஆனால் … Read more

யார் கத்துக்குட்டி..? அதிமுகவை கவனமாக பார்த்துக்கோங்க – அதிமுக – பாஜக கருத்து மோதல்!

தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேசிய கடம்பூர் ராஜுவுக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி எதிர்வினையாற்றியுள்ளார். அவர் தனது ட்வீட்டில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில், அ.தி.மு.க.வின் கடம்பூர் ராஜு, பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியுள்ளதோடு மரியாதைக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பி விடுவார் என்றும் அவன், இவன் என்ற ஏக வசனத்தில் பேசியுள்ளதோடு, அரசியலில் கத்துக்குட்டி என்று … Read more

ராகுல் காந்தியின் லண்டன் உரை; இதெல்லாம் சரி வராது- பாஜக எம்பி ஹேம மாலினி டென்ஷன்!

சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்தியாவின் நாடாளுமன்றம், பத்திரிகை, தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் சிலரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக விமர்சனம் முன்வைத்தார். மேலும், மத்தியில் ஆளும் பாஜக, பிரதமர் மோடி மாற்று, ஆர் எஸ் எஸ் அமைப்பு பற்றி பேசினார். எதிர்க்கட்சி தலைவர்களிடம் இந்தியாவின் நிலை குறித்து கேட்டால் உங்களுக்கே நன்றாக தெரியும் எனவும், என்னுடைய தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவதாகவும் தெரிவித்தார். பெகாஸஸ் முறைகேடு பற்றி பேசிய ராகுல் காந்தி, எங்களுடைய ஆட்சி காலத்தில் … Read more

Ponnambalam: சொந்த அண்ணனே பாய்சன் கொடுத்துட்டான்: பொன்னம்பலம் கூறிய பகீர் தகவல்.!

தமிழ் திரையுலகில் பிரபலமான வில்லன் நடிகராக திகழ்ந்தவர் பொன்னம்பலம். கடந்த 1988 ஆம் ஆண்டு ‘கலியுகம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர். அதனை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சரத்குமார் நடிப்பில் வெளியான ‘நாட்டாமை’ படத்தில் இவரின் வில்லன் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், கேப்டர் விஜய்காந்த், சரத்குமார், அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் பொன்னம்பலம். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், … Read more

இலங்கையின் கறுப்பு சந்தையில் டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

கறுப்பு சந்தையில் டொலர் பெறுமதியில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கறுப்புச் சந்தைகளில் கடந்த சில தினங்களாக அமெரிக்க டொலர் ஒன்றிற்கு செலுத்தப்பட்ட தொகை 270 ரூபாவாக இருந்ததாக பரிமாற்ற தரகர் ஒருவர் தெரிவித்துள்ளார். புறக்கோட்டை, வெள்ளவத்தை, காலி, பெந்தோட்டை மற்றும் பேருவளை ஆகிய கறுப்புச் சந்தைகளில் இதே விலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக நாளாந்த அடிப்படையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் இன்றையதினம் டொலரின் பெறுமதியில் சற்று … Read more

3 ஆண்டுகளுக்கு பின், வெளிநாட்டினருக்கு விசாக்கள் வழங்க சீன அரசு முடிவு

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா விநியோகத்தை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நாளை முதல் அனைத்து வகையான விசாக்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 28ம் தேதிக்கு முன் விநியோகிக்கப்பட்ட விசாக்கள் செல்லுபடியாகும் என்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா இல்லாத … Read more

போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம்: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்துக்கு ‘சீல்’…

விழுப்புரம்:  விழுப்புரத்தில் அரசு அனுமதி பெறாமல் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்டு வந்த தனியார் காப்பகத்தில், போதைப்பொருள் கொடுத்து, வயதானவர்களை மனநலம் பாதிக்கச் செய்து மதமாற்றம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து,  அன்பு ஜோதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்ததால் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி போலீஸாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் … Read more

வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ50 லட்சம் வர்த்தகம்

வேலூர்: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில்  இன்று ரூ50 லட்சம் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. … Read more

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட இடைக்கால தடை கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. சமூக ஆர்வலர், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கட்டுமானப் பணிகள் இன்னுமும் முடியாத நிலையில் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.