அந்த சில அரசியல் சக்திகள் யார்? மறைமுகமாக தாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

வதந்தி பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க தகவல் தொழில்நுட்பத்தை சில அரசியல் சக்திகள் தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இன்று 50வது பிரிட்ஜ் கருத்தரங்கு (BRIDGE’23) நடைபெற்றது. இதனை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழிச்சியில் பேசியதாவது, “எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. நாம் கையடக்க தொலைபேசியில் … Read more

குவியும் பாராட்டுகள்…! வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர்..!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா என்பவர் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் அதிவேக விரைவு ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவைகள் மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை ஒவ்வொரு இடத்திலும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பயணிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சோலாப்பூரில் இருந்து மும்பையில் … Read more

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வறுத்தெடுத்த பிரதமர் மோடி…!

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மதம் நடைபெறுகிறது. இச்சூழலில், பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு சென்றார். அங்கு பெங்களூர் – மைசூர் வரையிலான 118 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 8 ஆயிரத்து 480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் … Read more

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி பா.ஜ.க வில் இணைகிறாரா ?

ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வராகவும், அக்கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருக்கும் கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் தனது அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர் பாஜகவில் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு பாஜகவில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா? அல்லது ஆந்திராவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுமா என்பது விரைவில் தெரிந்துவிடும். பிரிக்கப்படாத ஆந்திராவின் கடைசி முதல்வராக இருந்தவர் கிரண் ரெட்டி. 2010, நவம்பர் 11-ம் தேதி, … Read more

பொதுவெளியில் சரியாக ஆடை அணியவில்லையென ஆத்திரம்; மனைவியைக் கொன்ற கணவன் – உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில், பொதுவெளியில் சரியாக உடை அணியவில்லை என மனைவியைக் கணவன் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்ட நபர் சப்னா என்றும், கொலைசெய்த நபர் மோஹித் குமார் என்றும் தெரியவந்திருக்கிறது. மனைவியைக் கொலைசெய்த கணவன் காஜிபூர் கிராமத்தில் வசித்த இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கிறார். மேலும் சப்னாவுக்கும், மோஹித் குமாருக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம், சப்னாவுக்கும், மோஹித் குமாருக்கும் … Read more

இந்திய வன ஆராய்ச்சி, கல்வி குழு பணியாளர்கள் தேர்வில் ஆள்மாறாட்டம்-4 பேர் கைது

கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய வன ஆராய்ச்சி, கல்வி குழு பணியாளர்கள் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ஹரியானா இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். எழுத்துத்தேர்வின்போது தேர்வு எழுதியவர்களின் புகைப்படம், கைரேகை பதிவு செய்யப்பட்ட நிலையில், நேர்முகத்தேர்வில் 4 பேரின் புகைப்படம், கைரேகை ஒத்துப்போகவில்லை. இதனால் அந்த நான்கு பேரையும் சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு குறித்து பேட்டியளித்த கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆள்மாறாட்ட வழக்கில் 4 பேரையும் இயக்கிய முக்கிய … Read more

‘போதைப்பொருள் கொடுத்து மனநலம் பாதிக்கச் செய்து மதமாற்றம்’ – அன்பு ஜோதி ஆசிரமம் குறித்து புதிய குற்றச்சாட்டுகள்

விழுப்புரம்: “அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்தவர்களுக்கு போதைப் பொருட்கள் கொடுத்து, அவர்களின் மனநலம் பாதிப்படையச் செய்து, பின்னர் அவர்களை மதமாற்றம் செய்துள்ளனர்” என தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்ததால் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி போலீஸாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவதும், ஆசிரமத்தில் … Read more

8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎஃப் திட்டம்

சென்னை: சென்னை ஐசிஎஃப்-பில் முதன்முறையாக 8 பெட்டிகள் கொண்ட அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படவுள்ளது. முதல் ரயிலை இம்மாத இறுதிக்குள் தயாரித்து வழங்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப்-பில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இங்கு அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்க ஆர்வம் காட்டப்படுகிறது. அதன்படி, முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. நாட்டிலேயே அதிக வேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்கு “வந்தேபாரத் … Read more

தமிழ் மொழி தேர்வை புறக்கணித்த 50 ஆயிரம் மாணவர்கள்… உளவியல் காரணம்..?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று தொடங்கிய முதல் பாடமாக தமிழ் மொழி தாளை 50,674 மாணவர்கள் எழுதாமல் புறக்கணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்வு எழுதிய 8.51 லட்சம் பேரில் 50,674 மாணவர்கள் தமிழ் மொழி முதல் தேர்வுக்கு ஆப்செனட்டாகியிருப்பது பள்ளிக்கல்வித்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது … Read more