Blue Sattai Maran: 'இசைக்கடவுள், அவார்ட் பைத்தியம்' இளையராஜாவையும் பார்த்திபனையும் நக்கலடித்த ப்ளூசட்டை மாறன்?

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற் நடைபெற்றது. இதில் 90வது அகாடமி விருதுகள் விழாவில் இந்தியா 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றது. Leo, Vijay, Trisha: லோகேஷ் தோள் மேல கைய போட்ட விஜய்… த்ரிஷா அதுக்கும் மேல… பார்க்கவே சிறப்பா இருக்கு! மேலும் இந்திய சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி … Read more

சென்னை வெள்ள பாதிப்பு தடுப்புக்கான திட்ட அறிக்கை: முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது திருப்புகழ் குழு

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை தடுக்க, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்த குழுவினர்   வெள்ள பாதிப்பு தடுப்புக்கான திட்டங்கள்குறித்து ஆய்வு செய்து, அதன் இறுதி அறிக்கையை இன்று முதல்வரிடம் சமர்பித்தது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்திட்டவர் திருப்புகழ் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை … Read more

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையினை துவக்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று 14.03.2023 துவக்கி வைத்தார். பின்னர், 2,539 பயனாளிகளுக்கு ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு ‘அனிதா நினைவு அரங்கம்’ என்று பெயர் சூட்டப்படும் … Read more

மார்ச் 17-ம் தேதி முதல் கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபடுவதாக பால் உற்பத்தியாளர்கள் தகவல்

சென்னை: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிடில் 17-ல் கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட போவதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொள்முதல் விலையை 1லி பசும்பாலுக்கு ரூ.35 லிருந்து ரூ.42க்கும், எருமைப்பாலுக்கு ரூ.44 லிருந்து ரூ.51 ஆக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு வழக்கு: மார்ச் 20ல் விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு..!!

டெல்லி: தெலுங்கானா ஆளுநர் தமிழிசையிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து ஒன்றிய அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தெலுங்கானாவிலும் ஆளும் பிஆர்எஸ் அரசுக்கும், ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி … Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ: பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டெல்லி பாஜக முக்கிய பிரமுகராக உள்ள பிரசாந்த் குமார் உமாராவ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 ஆம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்படுவது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபார்வேர்ட் செய்ததோடு, … Read more

தர்ஷன் பெயரில் பெண்ணிடம் மோசடி : சகோதரர்கள் கைது

நடிகர் தர்ஷன் தமிழில் ரஜினி முருகன், கனா, தும்பா, துணிவு ஆகிய படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானர். தர்ஷனுக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் உள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தர்ஷன் என நினைத்து சோஷியல் மீடியா போலி ஐடியில் ஒருவருடன் பேசி வந்துள்ளார். அவர்களின் நட்பு படிப்படியாக வளர்ந்து வாட்ஸ்அப் வரை சென்றுள்ளது. தர்ஷன் தான் என நினைத்த … Read more

டெல்லி: பைக்கில் வந்த நபர்கள் அட்டகாசம்; பையை பறித்து, தள்ளி விட்டு சென்றதில் பெண் நீதிபதி காயம்

புதுடெல்லி, டெல்லியில் குலாபி பாக் பகுதியில் காலை வேளையில் ரச்னா திவாரி லக்கன்பால் என்ற பெண் நீதிபதி, மாஸ்டர் யுவராஜ் என்ற தனது 12 வயது மகனுடன் நடைபயிற்சிக்காக வெளியே சென்று உள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் திடீரென நீதிபதியை தாக்கி அவரிடம் இருந்த கைப்பையை பறித்து உள்ளனர். ஆனால், உஷாரான பெண் நீதிபதி பையை பறிக்க விடாமல் தடுத்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பைக் நபர்கள் பையை பிடுங்கி … Read more

'இது தான் என் வலிமைக்கு காரணம்' – 186 ரன் குவித்த விராட் கோலி கூறிய பதில்…!

அகமதாபாத், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆனாலும், இந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் வென்ற இந்தியா பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றது. இதனிடையே, 4-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் விராட் கோலி 186 ரன்கள் குவித்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விராட் கோலி கூறியதாவது, இந்த போட்டியை நான் அனுகிய முறையை பொறுத்தவரை, … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.46 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 16 லட்சத்து 43 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 10 ஆயிரத்து 146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more