’’60 பேர் தங்கக் கூடிய இடத்தில் 180 பேர்’’.. அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு.. அறைகளுக்கு சீல்..!

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, ஆசிரம நிர்வாகி பயன்படுத்தி வந்த அறை மற்றும் மனநலம் குன்றியோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கு சீல் வைத்தனர். ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.ஜி.ஆனந்த், 60 பேர் மட்டுமே தங்கக் கூடிய ஆசிரமத்தில் 140 முதல் 180 பேர் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக கூறினார். Source link

அரியலூர் சோழர் பாசன திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்குக: அமைச்சர் துரைமுருகனுக்கு அன்புமணி கடிதம்

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான அரியலூர்: சோழர் பாசனத் திட்டத்தை 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்: ”தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு வேளாண்மையை விரிவாக்குவதும், பாசனப் பரப்பை அதிகரிப்பதும்தான் தீர்வு என்பதால், அதற்கான திட்டங்களை செயல்படுத்தக் கோரி இந்தக் கடிதத்தை … Read more

தெலங்கானா முதல்வருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் – ஒய்.எஸ்.ஷர்மிளா கைது

புதுடெல்லி: தெலங்கானா அரசைக் கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளாவை போலீசார் இன்று (மார்ச் 14) கைது செய்தனர். பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பாசனத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி வரும் ஒய்எஸ் ஷர்மிளா, இதைக் கண்டித்து டெல்லியில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார், ஷர்மிளாவையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து செய்தனர். கைதாகி வாகனத்தில் ஏறும்போது அவரும், தொண்டர்களும் … Read more

நீட் தேர்வை ரத்து செய்யும் அந்த ரகசியம் என்ன? போட்டு உடைத்த உதயநிதி

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கத்துக்கு அனிதா பெயர் சூட்டப்படுவதால் கல்வி பயில வரும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு இருந்த எதிர்ப்பு குறித்து அறிந்து கொள்வார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவை தொடக்க நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (மார்ச் 14) நடைபெற்றது. அனிதா நினைவு அரங்கம் அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள … Read more

Udhayanidhi Stalin: அமைச்சரான கையோடு அந்த தொழிலை கைவிட்ட உதயநிதி ஸ்டாலின்

கடந்த 2008ம் ஆண்டு தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான குருவி படம் மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின் . இதையடுத்து சூர்யாவின் ஆதவன் படத்தை தயாரித்ததுடன், அதில் கவுரவத் தோற்றத்திலும் வந்தார். 4 படங்களை தயாரித்த நிலையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவாகிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து சந்தானம் செய்த காமெடி தான் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருந்த உதயநிதி ஹீரோவானதும் … Read more

Poco அறிமுகம் செய்துள்ள புதிய X5 5G ஸ்மார்ட்போன்! 16,999 ஆயிரத்தில் அசத்தலான ட்ரிபிள் கேமரா

மிட் ரேஞ்சு பட்ஜெட் செக்மென்ட்டில் Poco நிறுவனம் அதன் புதிய X5 சீரிஸ் போன்களை வெளியிட்டுள்ளது. இந்த மிட் ரேஞ்சு ஸ்மார்ட்போன் இரு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும், மூன்று கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இதன் Base Poco X5 5G மற்றும் Poco X5 5G Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. விலை விவரம் மொத்தமாக இரு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் இந்த Poco X5 சீரிஸ் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ், 8GB … Read more

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் இவர்கள் தான்! அவருடையை சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் யார் என்பதை இங்கே பார்ப்போம்.  எலான் மஸ்க் எலான் மஸ்க் தென்ஆபிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். இவர் தற்போது எசுபேசுஎக்சுநிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், “டெஸ்லா மோட்டார்ஸ்“ நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப கால முதலீட்டாளர் இவர் ஆவார். தற்போது, எலான் மஸ்கின் நிகர சொத்துமதிப்பு 176 பில்லியன் … Read more

கர்நாடகம் வந்த பிரதமரை வரவேற்ற பிரபல ரவுடி! காங்கிரஸ் கட்சி கடும் சாடல்…

பெங்களூரு: மக்கள் நலத்திட்டங்களை கர்நாடகாவில் திறந்து வைக்க வருகை தந்தை பிரதமர் மோடியை, பாஜகவைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் சந்தித்து வண்ணம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான போட்டோவை கர்நாடக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இது மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் அடிக்கடி கர்நாடக மாநிலம் விஜயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த இரு … Read more

பாதிரியாரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி கைது

அரியலூர்: அரியலூரில் பாதிரியாரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். பாதிரியார் டோமினிக் சாவியேவிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய புகாரில் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி முத்துவேலை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டையில் அரசுக்குச் சொந்தமான தைல மரக்காட்டில் தீ விபத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரப் பகுதிக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தைல மரக்காட்டில் கொட்டப்பட்டுள்ள சருகுகளில் பிடித்த தீ மளமள வென எரிந்து வருகிறது. தைல மரக்காட்டில் ஏற்பட்ட தீயை 15 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.