பாஜக அண்ணாமலை ஒரு கத்துகுட்டி: காட்டமாக விமர்சித்த கடம்பூர் ராஜு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மைக்கை கண்டால் எதை வேண்டுமானாலும் பேசி விடுவார். அவருக்கு அது ஒரு வியாதி என்று விளாத்திகுளம் அருகே நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசினார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கோவில்பட்டி … Read more

ஆஸ்கர் விருதுக்கு கிரெடிட்… அப்படி மட்டும் செஞ்சுடாதீங்க… கார்கே கமெண்ட்டால் ஒரே சிரிப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. ராகுல் காந்தி குறித்த சர்ச்சையால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் பேச்சு கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான மல்லிகார்ஜுன கார்கே பேசியது முக்கியத்துவம் பெற்றது. ஆஸ்கர் விருது விழா அதாவது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த … Read more

Leo, Vijay, Trisha: லோகேஷ் தோள் மேல கைய போட்ட விஜய்… த்ரிஷா அதுக்கும் மேல… பார்க்கவே சிறப்பா இருக்கு!

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்தவர் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்தின் விறுவிறுப்பும் அடுத்தடுத்து என்ற சுவாரசியமும் லோகேஷ் கனகராஜுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. அதன்படி கைதி, மாஸ்டர், விக்ரம் என வெற்றி படங்களை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். Actress: 22 வயதிலேயே அந்த காட்சிகளில் நடிக்க அனுப்பி வைத்த அம்மா… புகழ்ந்து பேசும் மகள் நடிகை! கைதி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து … Read more

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்ட விடுமுறைகள்

தொடருந்து திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.  27.02.2023 திகதியிட்ட 2321/07 இலக்கம் கொண்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஜனாதிபதியினால் இலங்கை தொடருந்து  சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத் தப்பட்டது. மன்னிப்பு கோரி கடிதம் நாளை (15) பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அதிகாரிகளும் மன்னிப்பு கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொடருந்து  பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   Source link

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக, காஷ்மீரின் பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..!

காஷ்மீரின் பல இடங்களில், பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் சோபியான், புல்வாமா மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களில், காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட இன மக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தோரின் சைபர் தாக்குதல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Source link

கொரானா தொற்றால் இறந்த தனது பாட்டிக்கு ஆகாயத்திலிருந்து அஞ்சலி செலுத்திய பாடகி!

கனேடிய பாடகியான எமிலி மூர் 2020 ஆண்டு கொரானா தொற்றால் இறந்த தனது பாட்டிக்காக ஏர் பலூனிலிருந்து பாடல் பாடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பாட்டி மரணம் கனேடிய பாடகியும், பாடலாசிரியருமான எமில் மூரின்(Emilee Moore)  பாட்டி ஷெர்லி லிரா கடந்த 2020 ஆம் ஆண்டு கொரானா தொற்றால் மரணமடைந்துள்ளார். வட அமெரிக்காவில் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் இறந்தவர்களில் தனது பாட்டியும் ஒருவர் என அவர் கூறியுள்ளார். ”அவர் சிறந்த சிக்கன் நூடுல்ஸ் சூப் செய்து தருவார், மேலும் … Read more

உ.பி. பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வீடியோ வெளியிட்ட உ.பி. மாநில பாஜக நிர்வாகியான வழக்கறிஞர் பிரசாந்த் உம்ராவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழகஅரசும், டிஜிபியும் வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என்று கூறியதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். மேலும் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து, பல வழக்குகள் போடப்பட்டு உள்ளது. இந்த … Read more

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைதான ஆசிப் முசாப்தீன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்

ஈரோடு: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைதான ஆசிப் முசாப்தீன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்தாண்டு ஜூலையில் கைதான ஆசிப் முசாப்தீனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

திருவள்ளூரில் தனியார் ஆலையில் இயந்திரத்தின் பாகம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூர்: காக்களூர் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் இயந்திரத்தின் பாகம் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். இயந்திரத்தை பழுது பார்க்கும்போது அதன் பாகம் விழுந்ததில் உ.பி.யை சேர்ந்த சிவம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடங்கப்பட்டதும் தமிழக அரசு பாடத்திட்டம் கைவிடப்படும்: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடங்கப்பட்டதும் தமிழக அரசு பாடத்திட்டம் கைவிடப்படும் என புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 128 அரசு பள்ளிகள்  சிபிஎஸ்இ  பாடத்திட்டத்திற்கு மாற ஒன்றிய அரசிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.