வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி – உ.பி. பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு

மதுரை: வட மாநில தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய உத்திர பிரதேச பாஜக செய்தி தொடர்பாளருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரசாந்த் உம்ராவ் … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் | எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்க இருக்கிறது. முதல் கூட்டத்தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடின. அப்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் இந்தியா குறித்த லண்டன் பேச்சுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தனர். … Read more

மோடி வழியில் மு.க.ஸ்டாலின்; அப்படியே அந்த நீட் தேர்வு…? குஷ்பு சொன்ன மெசேஜ்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. இன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. இதையொட்டி முதல்வர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “பரீட்சை டென்ஷன் வேண்டாம். எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்தில் இருந்து தான் வரப் போகிறது. எனவே உறுதியுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். மு.க.ஸ்டாலின் வாழ்த்து தன்னம்பிக்கை மற்றும் உறுதி இருந்தால் பாதி வெற்றி பெற்று விட்டதாக அர்த்தம். தேர்வு என்பது உங்களை சோதிக்கும் விஷயம் அல்ல. … Read more

Samantha: அபார்ஷன் செய்தாரா சமந்தா? பிரபலத்தின் டிவிட்டால் பரபரப்பு!

நடிகை சமந்தா அபார்ஷன் செய்ததாக அவரே தெரிவித்தார் என பிரபலம் ஒருவர் டிவிட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது பாலிவுட் படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். நடிகை சமந்தா சினிமாவில் பீக்கில் இருந்த போதே தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ​ Amala Paul: அடங்க மாட்டாங்க போல… பிகினி உடையில் கடற்கரையில் செம்ம ஆட்டம் போட்ட அமலா … Read more

இங்கிலாந்தில், ஊதிய உயர்வுக் கோரி அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்..!

இங்கிலாந்தில், ஊதிய உயர்வுக் கோரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, பணிச்சுமை, ஊதியக்குறைப்பு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தேசிய மருத்துவ சேவையின் மருத்துவ பணியாளர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களில் 45 சதவீதம் பேர் இளநிலை மருத்துவர்கள் என்பதால், அவசரகால மருத்துவச் சேவைகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் … Read more

ஒன்றல்ல… 20 வங்கிகள் கடும் நெருக்கடியில்: மக்கள் பணத்திற்கு உத்தரவாதம் கோரும் நிபுணர்கள்

அமெரிக்காவில் சுமார் 20 வங்கிகள் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதலீடுகளுக்கு உத்தரவாதம் கோரியுள்ளனர் நிபுணர்கள். ஜனாதிபதி பைடன் மக்களுக்கு உரை அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியானது திவாலாகி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், மேலும் பேரழிவைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மக்களுக்கு உரையாற்றியிருந்தார். @reuters பங்கு சந்தை வர்த்தகம் செயல்பாட்டுக்கு வரும் சில நிமிடங்கள் முன்பு பேசிய ஜனாதிபதி பைடன், நமது வங்கி அமைப்பு பாதுகாப்பானது என்று … Read more

அமைச்சர் மா.சு.வின் மனித நேயம்: கருணை கொலைக்கு மனு அளிக்கப்பட்ட சிறுவன் மீண்டு வந்த அதிசயம்!

சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மனித நேயத்தின் காரணமாக, கருணைக் கொலைக்கு வந்த சிறுவன், இன்று உடல்நலம் தேறி சொந்த ஊருக்கு திருப்பியுள்ளார்.  கருணை உள்ளத்தோடு ஒரு வருடம் தனது சட்டமன்றம் விடுதியில் தங்க வைத்து காப்பாற்றி வழி அனுப்பி வைத்த அமைச்சர் மா.சு.வுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சிறுவன்ந ஒருவன் தீக்காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது மகனை கருணை கொலை செய்யக்கோரி, குடும்பத்தினருடன் வந்த … Read more

பேத்தியின் குழந்தையை பார்க்க வந்த போது பரிதாபம் லாரி மோதி தொழிலாளி பலி

ஆரல்வாய்மொழி : திருநெல்வேலி மாவட்டம் கள்ளிகுளம் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை. ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள ஒரு ஆக்கர் கடையில் வேலை பார்த்து வந்தார். அவரது மகனின் மகளான பேத்திக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்க்க அய்யாத்துரை நேற்று காலை கள்ளிகுளத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆசாரிப்பள்ளம் நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் வெள்ளமடம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வந்த போது சாலையில் பேரிகார்ட் வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து, வெள்ளமடம் நோக்கி ஒரு … Read more

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான  மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்சமாக 34 குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பணியில் இல்லாத அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: சபாநாயகர் எச்சரிக்கை

புதுச்சேரி: பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பணியில் இல்லாத அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் எச்சரித்துள்ளார். புதுச்சேரிப்பேரவை நடக்கும் நாட்கள் முழுவதும் அரசு துறை அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.