Ajith:மகள், மகன், ஷாலினியுடன் செம ஸ்டைலிஷ் லுக்கில் அஜித்: தீயாய் பரவிய போட்டோ

படப்பிடிப்பு இல்லாவிட்டால் அஜித் குமார் செய்வது இரண்டே இரண்டு விஷயம் தான். ஒன்று தன் ஸ்போர்ட்ஸ் பைக்கை எடுத்துக் கொண்டு ரைடு சென்றுவிடுவார். இரண்டு, தன் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவார். இது கோலிவுட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக், மகள் அனௌஷ்காவுடன் வெளியே சென்றிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஷாலினி. உடல் எடையை குறைத்து ஷார்ட்ஸ், சட்டை, ஷூ, கூலிங் கிளாஸில் … Read more

வேகமாக பரவும் H3N2: இந்த மாநிலத்தில் முதல் மரணம் பதிவு, பீதியில் மக்கள்

H3N2 வைரஸால் குஜராத்தில் முதல் நபர் பலி: இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது, இந்த வைரஸால் தற்போது குஜராத் மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. வதோதராவைச் சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயாளியாக இருந்த நிலையில் சாயாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. H3N2 வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்று நிர்வாகம் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

தமிழகத்தில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக முதல்  ஸ்டாலின் ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  இதில் திட்ட இயக்குனர் தண்டபாணி, ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  2021 – 2022 மற்றும் 2022 – … Read more

ஜெர்மனியில், ஊதிய உயர்வு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்..!

ஜெர்மனியில், ஊதிய உயர்வு வழங்கக்கோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், விமான சேவை முடங்கியது. இரவு நேரம், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியம் வழங்கக் கோரி, பெர்லின், பிரிமென், ஹம்பெர்க் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், தலைநகர் பெர்லினில் மட்டும் 200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 45,000 பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்கு, விமான … Read more

நாடு முழுவதும் உள்ள முன்னணி மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல்..!

நாடு முழுவதும் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.  62 முன்னணி தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளை மன்சுக் மாண்டவியா அண்மையில் சந்தித்து பேசினார்.  இந்திய மாணவர்கள் உள்நாட்டிலேயே மருத்துவக் கல்வியைத் தொடரும் வகையில், மருத்துவப் படிப்புகளை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். Source link

லண்டனில் கத்தார் கோடீஸ்வரரால் பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்: குடும்பத்தினர் எடுத்த முடிவு

லண்டனில் கத்தார் கோடீஸ்வரர் ஒருவரது வாகனம் மோதி பலியான பிரித்தானியரின் குடும்பம் தற்போது இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. கத்தார் கோடீஸ்வரரின் வாகனத்தில் சிக்கி மத்திய லண்டனில் 66 வயதான சார்லஸ் ராபர்ட்ஸ் என்பவரே கத்தார் கோடீஸ்வரரின் மின்னல் வேக வாகனத்தில் சிக்கி பரிதாபமாக பலியானவர். 2019 ஆகஸ்டு மாதம் நடந்த இந்த சம்பவத்தில் கத்தார் கோடீஸ்வரரான ஹசன் நசர் அல் தானி என்பவர் தமது ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தில் சென்றுள்ளார். Image: SWNS … Read more

கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம்…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று சொல்லக்கூடியவகையில் போய்க்கொண்டிருக்கிறது தொலைத்தொடர்பில் நாளுக்கு நாள் பெருகிவரும் அதிநவீனம். ஆனால் இதெல்லாம் இல்லாமல் மனிதன் நிம்மதியாக வாழ்ந்த காலத்தில் அவன் தழுவிய பொழுதுபோக்கு அம்சங்கள் அழகானவை, அமைதியானவை, சாகா வரம் பெற்றவை.. அப்படிப்பட்ட காலத்தில் பிறந்து சாதனை படைத்து கோடானு கோடிபேர் காதுகளில் இசை அருவியை பாயச்செய்தவர் திரைஇசைத் திலகம் கே.வி.மகாதேவன். 1940களில் தொடங்கி … Read more

புழல் சிறையில் விசாரணை கைதியிடம் செல்போன் பறிமுதல்

திருவள்ளூர்: புழல் சிறையில் விசாரணை கைதி முகமது அப்னாஸிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான முகமது கழிவறையில் மறைத்து வைத்திருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி பதில்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக  முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார். சிறப்பு கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த பின்பு, பயணத்தை ரத்து செய்தால் வரித்தொகையை முழுமையாக திருப்பி தர ஒன்றிய அரசு உத்தரவு!!

டெல்லி : விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வசூலிக்கப்படும் வரிகள் மற்றும் இதர சேவை கட்டணங்கள் அனைத்தும் பயணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு முழுமையாக திருப்பி தர ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. விமான டிக்கேட் முன்பதிவு செய்யும் போது, வரிகள், பயனாளர் வசதி கட்டணம், விமான நிலைய வளர்ச்சி கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களையும் சேர்த்தே வசூலிக்கிறது. ஆனால் பயணத்தை ரத்து செய்யும் போது இந்த தொகையை விமான நிறுவனங்கள் திருப்பி அளிப்பதில்லை என்பது குற்றச் சாட்டாகும். … Read more