நாய்க்கடி சம்பவங்கள்: `இதை செய்தால் ஆறு மாதங்களில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்!’
தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், தெருநாய்க்கடிகளும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும், இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, விலங்குகளுக்குக் கருத்தடை செய்வதே தீர்வு என்று விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நம் நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, தொடர் பிரச்னையாக மாறியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் 1.2 கோடியாக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கையானது, தற்போது 6.2 கோடியாக அதிகரித்துள்ளது. தெருநாய்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியாவும், சீனாவும் முன்னிலை வகிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. … Read more