மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்க மறுத்தார் டிரான்!

இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், ஏற்க மறுத்துள்ளார். முன்னதாக, மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களைக் கட்டுப்படுத்த பொலிஸார்  மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு அதன்படி, … Read more

அமெரிக்காவில் அம்மா உணவகம்.! பட்ஜெட் விலையில் தமிழ்நாட்டு உணவு., அசத்தும் இந்தியர்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்தியர் ஒருவர் அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில் பட்ஜெட் விலையில் உணவகம் நடத்தி அசத்தி வருகிறார். அம்மா உணவகம் தமிழ்நாட்டில் அம்மா உணவகம் பற்றி தெரியாதவர் இருக்கமுடியாது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அவரது ஆட்சிக் காலத்தின்போது ‘அம்மா உணவகம்’ தொடங்கப்பட்டது. மிக குறைந்த விலையில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றும் உணவுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அம்மா உணவகம் அமெரிக்காவில் இருக்கிறது என கூறினால் உங்களால் … Read more

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவையை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் மண்டலத்திற்குட்ட பகுதிகளில், ரூ.60 கோடி மதிப்பீட்டில் நங்கநல்லூர் ராம்நகர் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், பழவந்தாங்கல் பி.வி.நகரில் நாய் இனபெருக்க கட்டுபாட்டு மையம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதியில் உள்ள 67 தெருக்களில் மழைநீர் கால்வாய், 71 சாலைகள் மேம்பாடு போன்ற திட்டட்பணிகளின் தொடக்க விழா ஆதம்பாக்கம் நிலமங்கை நகர் வள்ளலார் தெருவில் நேற்று நடந்தது. ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என். சந்திரன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் பாஸ்கரன், பொறியாளர்கள் வளர்மதி, முருகவேல், … Read more

மதுரை, நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: மதுரை,நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. புஷ்பவனம் என்பவரது வழக்கில் அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ராகுலுக்கு எதிராக பாஜ கடும் அமளி நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மைக் அணைக்கப்படுவதாக லண்டனில் ராகுல்காந்தி பேசியதை கண்டித்து நாடாளுமன்றத்தில் பா.ஜ அமளியில் ஈடுபட்டது. இதனால் இருஅவைகளும் முடங்கின. நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது.  அடுத்த மாதம் 6ம் தேதி  வரை நடைபெறும் 2வது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவை கூடியதும் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் போது மைக் அணைக்கப்படுவதாக லண்டனில் புகார் தெரிவித்த … Read more

கனவில் வாழ்வது போல் உணர்கிறேன் : ராம்சரண் நெகிழ்ச்சி

நாட்டு நாட்டு படாலுக்காக ஆஸ்கர் விருது வென்ற ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர்கள், திரை உலகினர் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் பட நாயகர்களில் ஒருவரான ராம்சரண் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், ‛‛ஆர்ஆர்ஆர் இந்திய சினிமா வரலாற்றிலும் எங்கள் வாழ்க்கையிலும் ஒரு சிறந்த படமாக இருக்கும். ஆஸ்கார் விருதை வென்றதற்காக அனைவருக்கும் நன்றி சொல்ல முடியாது. இப்போது நான் கனவில் … Read more

ஓட்டுனர் தேவையில்லை; ஆட்டோமேட்டிக் மின்சார வாகனம்: சென்னை ஐ.ஐ.டி புதிய கண்டுபிடிப்பு

ஓட்டுனர் தேவையில்லை; ஆட்டோமேட்டிக் மின்சார வாகனம்: சென்னை ஐ.ஐ.டி புதிய கண்டுபிடிப்பு Source link

டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் சொத்து பறிமுதல் நடவடிக்கை!

தமிழக அரசின் மதுபான கதையான டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்துவிட்டு, போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை, அவர்களின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை பெருநகர காவல் துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்துசாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்துவருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் … Read more

புலம்பெயர் தொழிலாளர் தாக்குதல் வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி கைது!!

புலம் பெயர் தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கபட்டவரில் ஒருவர் வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் … Read more