திருட வந்த இடத்தில் சாப்பிட்டு தூங்கிய திருடன் !! குறட்டை சத்தத்தால் பிடிபட்ட சம்பவம்..!!

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் மூன்றாவது பிரதான சாலை பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக் நரேன். தனியார் நிறுவன ஊழியர். இவரது பெற்றோர் இதே அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருகின்றனர். கார்த்திக் நரேனின் தந்தை ரங்கநாத் தாயாரும் காசிக்கு சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் காசியில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு திரும்பினர். இதனால் கார்த்திக் நரேன் பெற்றோரின் வீட்டை திறந்து வைத்துவிட்டு மாடியில் உள்ள தனது … Read more

“சிறு வயதில் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்!" – சுவாதி மாலிவால்

டெல்லியின் பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சிறு வயதில் தான் தன்னுடைய தந்தையால் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி பெண்கள் ஆணையத்தின், சர்வதேச பெண்கள் தின விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய சுவாதி, “நான் நான்காம் வகுப்பு படிக்கும் வரை, என்னுடைய தந்தையால் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன். அப்படி தொந்தரவுக்கு ஆளாகும்போது, நான் கட்டிலின் அடியில் தப்பித்து ஒளிந்துகொள்வேன். ஸ்வாதி மாலிவால் அந்த சமயத்தில் இப்படிப்பட்ட ஆண்களுக்கு எவ்வாறு பாடம் புகட்டுவது, எப்படி பெண்கள், … Read more

நாம் தமிழர் கட்சி சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் பேசிய வீடியோவை  தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் … Read more

வட மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சீமான் மீதான வழக்கில் கூடுதல் பிரிவுகள் சேர்ப்பு

சென்னை: குறிப்பிட்ட சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், வட மாநிலத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், … Read more

தமிழகத்தில் 'டிரிப்ல் சி' ஆட்சிதான் நடக்கிறது.. அது என்ன? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சிலுவைப்பட்டியில் நடந்தது. இதில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியது; ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் ‘நீட் தேர்வு ஒழிப்பு’ என்று கூறினார். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. 23 மாணவர்களை இந்த அரசு … Read more

பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிராக ஏராளமானோர் நாடு தழுவிய போராட்டம்!

பிரான்ஸில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-லிருந்து 64-ஆக உயர்த்தும் சட்டமசோதாவை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதிபர் இமானுவேல் மேக்ரனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தால் பிரான்சில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தலைநகர் பாரீஸில் நடைபெற்ற 7வது நாள் போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர், இளைஞர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முகமூடி அணிந்து பட்டாசுகளை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடிக்க … Read more

மார்ச் 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 295-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 295-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திருவாரூர்- திருவண்ணாமலைக்கு 2ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

திருவாரூர்: திருவாரூரிலிருந்து திருவண்ணாமலைக்கு மாவட்டத்தின் பொது விநியோக திட்ட அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் அனுப் பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 7 லட்சத்து 65 ஆயிரம் மெ.டன் அளவில் நெல் கொள் முதல் செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் குறுவை பருவத்தில் 4 லட்சம் மெ.டன்னும், சம்பா பருவத்தில் தற்போது வரையில் மூன்றரை லட்சம் மெ. டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. … Read more

தென்காசி – நெல்லை இடையே மின்வழித்தட அகல ரயில் பாதையில், நாளை அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை

தென்காசி: தென்காசி – நெல்லை இடையே மின்வழித்தட அகல ரயில் பாதையில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின்பொறியாளர் ஏ.கே.சித்தார்தா தலைமையில் நாளை அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை நடைபெற உள்ளது. சோதனை நடைபெறும் நேரத்தில் தண்டவாளத்தைக் கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி திமுக சார்பில் நோட்டீஸ்

டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 2-வது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அலுக்கப்பட்டுள்ளது.