தெறிக்கவிட்ட மார்க் வுட்… முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி


ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியை வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ அணி முதலில் துடுப்பாடியது.

38 பந்துகளில் 72 ஓட்டங்கள்

துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க, மற்றொரு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ஓட்டங்கள் விளாசி, வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

தெறிக்கவிட்ட மார்க் வுட்... முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி | Ipl 2023 Lucknow Super Giants Delhi CapitalsTOI Sports

194 ஓட்டங்கள் இலக்கு

அடுத்தடுத்து களமிறங்கிய தீபக் ஹுடா 17 ஓட்டங்கள், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 12 ஓட்டங்களில் வெளியேறினர். அதன்பிறகு அதிரடி காட்டிய நிகோலஸ் பூரன் 36 ஓட்டங்கள், ஆயுஷ் படோனி 18 ஓட்டங்கள் சேர்க்க, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் குவித்தது.

குருணால் பாண்ட்யா 15 ஓட்டங்களுடனும், கவுதம் 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

தெறிக்கவிட்ட மார்க் வுட்... முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி | Ipl 2023 Lucknow Super Giants Delhi CapitalsTOI Sports

டெல்லி தரப்பில் கலீல் அகமது, சேட்டன் சகாரியா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 194 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 12 ஓட்டங்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மிட்சல் மார்ஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், ஷர்பாஸ் கான் 4 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து மார்க் வுட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக டேவிட் வார்னருடன் ரூசோவ் ஜோடி சேர்ந்தார்.

தெறிக்கவிட்ட மார்க் வுட்... முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி | Ipl 2023 Lucknow Super Giants Delhi Capitals

இந்த ஜோடியில் அதிரடி காட்டிய ரூசோ 30 (20) ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரோவ்மேன் பவல்(1), அமன் ஹக்கிம் கான்(4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் தனி நபராக போராடிய கேப்டன் டேவிட் வார்னரும் 56 (48) ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய அக்ஷர் படேல் 16 (11) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
முடிவில் முகேஷ் குமார் ரன் ஏதும் எடுக்காமலும், குல்தீப் யாதவ் 6 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

தெறிக்கவிட்ட மார்க் வுட்... முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி | Ipl 2023 Lucknow Super Giants Delhi Capitals

இறுதியில் டெல்லி அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 5 விக்கெட்டுகளும், பிஷ்னோய் 2 மற்றும் அவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ அணி, லீக் சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

தெறிக்கவிட்ட மார்க் வுட்... முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி | Ipl 2023 Lucknow Super Giants Delhi CapitalsTOI Sports



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.