ஆன்லைன் ரம்மி விபரீதம் அண்ணனை கொன்ற தம்பி| Online Rummy Tragedy Brother killed brother

‘ஆன்லைன் ரம்மி’ விபரீதம் அண்ணனை கொன்ற தம்பி தூத்துக்குடி, : துாத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த அண்ணன் நல்லதம்பி 36, சொத்தையும் பிரித்து கேட்டதால் ஆத்திரமடைந்த தம்பி முத்துராஜ் 32, அவரை கம்பியால் அடித்துக்கொலை செய்தார். தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே சில்லாநத்தத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன்கள் நல்லதம்பி, முத்துராஜ். லாரி டிரைவராக வேலை செய்த நல்லதம்பி , ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டினார். தனது சொத்துக்களை விற்று விளையாடியதோடு தம்பி … Read more

Vijay tv pugazh : எப்போதுமே எனக்குள் நீ இருப்பாய் மாமா.. விஜய் டிவி புகழின் கண்ணீர் பதிவு!

சென்னை : விஜய் டிவி புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளார். விஜய் டிவி நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, அதிலும் குறிப்பாக கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர். தொலைக்காட்சிகளில் சீரியல்களை பார்த்து பார்த்து நொந்து போன இல்லத்தரசிகளுக்கும் இந்த காமெடி நிகழ்ச்சியின் மீது தனி ஈடுபாடு உண்டு. விஜய் டிவி புகழ் விஜய் … Read more

அமெரிக்காவை புரட்டி போட்டுள்ள சூறாவளி! ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்!

அமெரிக்காவில் புயல் ஒரு பேரழிவை உருவாக்கியுள்ளது. இயற்கையின் அழிவுக்கு முன்னால், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடு கூட தாக்கு பிடிப்பது கடினம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இயற்கையின் இந்த தாக்குதலில் இதுவரை 32 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக இவர்கள்வ்அனுமதிக்கப்பட்டுள்ளனர். டென்னசி, ஆர்கன்சாஸ், இந்தியானா மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய இடங்களில் இயற்கை சீற்றத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமையும் கடுமையான இடி, புயல் மற்றும் சூறாவளி … Read more

ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான வேலூர் கோட்டை அகழியில் பெண் சடலம் மீட்பு.!

வேலூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேலூர் கோட்டையில் ஹிஜாப் அணிந்த சில பெண்கள் தங்கள் நண்பர்களுடன் சென்றுள்ளனர். அப்போது சில நபர்கள் அந்த பெண்களை வழிமறித்து ஹிஜாப்பை கழற்றுமாறு வற்புறுத்தி அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் என மொத்தம் 7 பேரை கைது … Read more

நிலத்துக்கு அடியில் தோண்டாமல் கடலில் இருந்து குடிநீரை எடுக்க திட்டமிட வேண்டும் – சிவதாணுப் பிள்ளை வலியுறுத்தல்

சென்னை: குடிநீருக்காக நிலத்துக்கு அடியில் தோண்டாமல், கடலிலிருந்து எடுக்கத் திட்டமிட வேண்டுமென பிரம்மோஸ் மையத்தின் நிறுவனர் சிவதாணுப் பிள்ளை வலியுறுத்தி உள்ளார். உலக தண்ணீர் தினத்தையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இந்திய பொறியியல் நிறுவனத்தில் (ஐஇஐ) நேற்று முன்தினம் உச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரம்மோஸ் மையத்தின் நிறுவனர் ஏ.சிவதாணுப் பிள்ளை சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக உலக தண்ணீர் தினத்தையொட்டி நடைபெற்ற அறிவியல் புராஜக்ட் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 5 கல்லூரிகள் மற்றும் … Read more

டெல்லியில் இன்று சமூக நீதிக்கான தேசிய மாநாடு – திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்பு

சென்னை: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று (ஏப். 3) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளது. அவர் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக மாநாட்டில் உரையாற்றுகிறார். டெல்லி இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க … Read more

விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்… பகிரங்கமாக அறிவித்த நாடு

சிரியாவில் இருந்து தங்களது எல்லைக்குள் வந்த அடையாளம் தெரியாத விமானத்தை வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் சுட்டு வீழ்த்திய விமானம் இஸ்ரேல் மற்றும் சிரியா நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து காணப்படும் இந்த சூழலில், விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. @reuters மேலும், விமானத்தை வீழ்த்திய விவகாரம் எந்த நிலையிலும் தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது எனவும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளது. சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு எதிராக இஸ்ரேல் பல … Read more

பங்கு சந்தையில் நஷ்டம் தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை

மதுரை: மதுரை, அவனியாபுரம், பிரசன்னா காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (39). இவரது மனைவி மணிமாலா. தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஜெகதீஷ் மேலாளராக பணியாற்றினார். அப்போது அவர் பங்கு சந்தையில் முதலீடு செய்தார். முதலில் ஓரளவு லாபம் வந்தது. இதையடுத்து ஜெகதீஷ் அக்கம்பக்கம் கடன் வாங்கி  முதலீடு செய்தார். திடீரென பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டு அவர் வாங்கிய பங்குகளின் விலை மிகவும் குறைந்தது. இதனால் ஜெகதீசனுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு, … Read more

சிபிஐ 60ம் ஆண்டு விழா பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ், சிபிஐ அமைப்பு கடந்த 1963ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்பட்டது.   சிபிஐ.யின் 60ம் ஆண்டு விழா டெல்லி விக்யான் பவனில் இன்று நடைபெறுகிறது.  பிரதமர் மோடி பங்கேற்று விழாவை தொடங்கி வைக்க உள்ளார். மேலும், ஷில்லாங், புனே, நாக்பூர் நகரங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக கட்டிடங்களையும் காணொலி மூலம் திறந்து வைக்கிறார். சிபிஐ வைர விழா ஆண்டின் நினைவாக தபால்தலையையும் வெளியிட உள்ளார். அத்துடன், சிபிஐ அமைப்பின் … Read more

PS 2 Release Date: பொன்னியின் செல்வன் 3ம் பாகமா..? பார்த்திபன் கொடுத்த ரியாக்‌ஷன்!

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29ம் தேதி நடைபெற்றது. இதில், இயக்குநர் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், கமல், சிம்பு, பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு நடிகர் பார்த்திபன் க்யூட்டாக ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் 2 மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் … Read more