''அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் திமுக: நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…..!'' –  சேலத்தில் இபிஎஸ் பேச்சு

சேலம்: ”அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்,” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். சேலம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் மத்தியில் பழனிசாமி பேசியது: ”அதிமுக ஆலமரம் போல் பரந்து, விரிந்து, வளர்ந்து தமிழகத்தில் வலிமையான இயக்கமாக இயங்க … Read more

தண்டனைக்கு தடைகோரி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு

புதுடெல்லி: சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அளித்த 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் டிரம்ப் கைது.. காய் நகர்த்தும் ஜோ பைடன்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் பாலியல் விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட உள்ளதற்கு பின்னால் அதிபர் ஜோ பைடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதிபர் தேர்தல் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறு வழக்கம். அந்தவகையில் அத்பர் ஜோ பைடனின் பதவிக்காலம் விரைவில் முடியப்போகிறது. தேர்தலுக்கு குடியரசு கட்சியின் … Read more

‘ஆஸ்திரேலிய கிராண்ட் பிரி’ கார் பந்தயம்.. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம்..!

ஏராளமான விபத்துகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிராண்ட் பிரி கார் பந்தயத்தில், மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம் பிடித்தார். மெல்போர்னில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சாம்பியனான வெர்ஸ்டப்பன் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். போட்டி நிறைவடைய சில சுற்றுகளே இருந்த நிலையில், கார்கள் ஒன்றோடொன்று மோதியும், தடுப்பு சுவரில் மோதியும் அடுத்தடுத்து விபத்துகள் நேர்ந்ததால் போட்டி 3 முறை நிறுத்தப்பட்டது. 8 கார்கள் விபத்துக்குள்ளாகி வெளியேறிய நிலையில், எஞ்சியிருந்த 12 போட்டியாளர்களில் வெர்ஸ்டப்பன் … Read more

கூரை இல்லை, சுவர் இல்லை., ஆனால் ஆயிரக்கணக்கில் வாடகை! பேசுபொருளான சுவிட்சர்லாந்து ஹோட்டல்

சுவரும் கூரையும் இல்லாத ஹோட்டலைப் பார்த்திருக்கிறீர்களா..? மக்கள் ஆயிரக்கணக்கில் செலவழித்து அதில் வாழ ஆசைப்படுகின்றனர் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், இவை அனைத்தும் உண்மைதான்! சுவரும் கூரையும் இல்லாத சுவிட்சர்லாந்து ஹோட்டல் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்து கண்களைத் திறந்து பார்க்கும்போது, சுற்றிலும் அழகான மலைகள், எங்கும் அழகான மரங்கள் மற்றும் செடிகள் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் படுக்கைக்கு அருகில் ஜன்னல் அல்லது கதவு இருக்கக்கூடாது, இந்த மயக்கும் காட்சி மற்றும் நீங்கள் நிலவின் கீழ் … Read more

சென்னையின் புகழ்பெற்ற எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து… வீடியோ

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் மேல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 14 மாடி கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளம்பரப் பலகை தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது ஒருமணி நேர போராட்டத்திற்குப் பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. செயலக கட்டிடத்தைப் போல் 1959 இல் கட்டப்பட்ட எல்ஐசி கட்டிடம் 177 அடி உயரத்துடன் நாட்டிலேயே மிக … Read more

சாலையோரம் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் சில பூக்கள் மட்டும் மலரும். இதில், சாலையோரங்களில் பூக்கும் ஜெகரண்டா, பிளேம் ஆப் தி பாரஸ்ட் போன்ற மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த மலர்கள் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பூக்கத் துவங்கி மே மாதம் வரை காணப்படும். தற்போது, இந்த மலர்கள் ஊட்டி – கோவை சாலையில் மரப்பாலம் முதல் பர்லியார் வரையிலும், ஊட்டி – மஞ்சூர் சாலையில் பல்வேறு பகுதிகளிலும், ஊட்டி-கோத்தகிரி … Read more

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல்தளத்தில் தீ விபத்துஏற்பட்டுள்ளது. விடுமுறை நாளில் எல்.ஐ.சி. கட்டடத்தின் 14-வது மாடியின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

‘ஸ்டண்ட்’ செய்வதாக கூறி திருமண நிகழ்ச்சியில் இதெல்லாம் தேவையா?: பொம்மை துப்பாக்கி வெடித்ததால் மணமகள் பீதி

மும்பை: ‘ஸ்டண்ட்’ செய்வதாக கூறி திருமண நிகழ்ச்சியில் பொம்பை துப்பாக்கியை பயன்படுத்திய மணமகளின் மீது வெடித்தால் அவர் பீதிடைந்தார். திருமண நிகழ்ச்சிகளில் போட்டோ ஷோ நடத்துவதற்காக விதவிதமான ‘ஸ்டண்ட்’ செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் மஹாராஷ்டிராவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகனும், மணமகளும் கையில் துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். பொம்மை துப்பாக்கி என்பதால், அந்த துப்பாக்கியின் பட்டனை ஆன் செய்ததும் அதிலிருந்து பட்டாசு தீப்பொறிகள் பறந்தன. தீவிரமான வெடி பொருளாக இல்லாவிட்டாலும் கூட, … Read more

AR Rahman Trending Video: விமானத்தில் ஏஆர் ரஹ்மானை வெட்கப்பட வைத்த அமீன்… அந்த க்யூட் ஸ்மைல்!

சென்னை: இந்தியளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏஆர் ரஹ்மான். ஏஆர் ரஹ்மான் இசையில் சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களும் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவுள்ளன. இந்நிலையில், விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஏஆர் ரஹ்மானை அவரது மகன் அமீன் வெட்கப்பட வைத்துள்ள வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. பிஸி ஷெட்யூலில் ஏஆர் ரஹ்மான் ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏஆர் … Read more