ஸ்ரீவில்லிப்புத்தூர்: `தந்தையைப் பார்த்து யோகா கற்ற மகள்'; சர்வதேச போட்டிகளுக்குத் தேர்வாகி அசத்தல்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குடியரசு. இவரது மனைவி கீதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கவியரசி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் ஜெயவர்த்தினி. ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். குடியரசு, கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு காலங்களில் நேரத்திலும் கூட குடியரசு வீட்டுக்குள்ளேயே தொடர்ச்சியாக யோகாசன பயிற்சி செய்துவந்துள்ளார். இதைப்பார்த்து ஆர்வமடைந்த அவரின் … Read more

ஏப்ரல் 14ஆம் தேதி, பிற்பகலில் ஊழல் பட்டியல், ரபேல் வாட்ச் பில் ஆகியவை வெளியிடப்படும் – அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நாரதகான சபாவில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் அண்ணாமலை பங்கேற்பு இலக்கிய திருவிழாவில் பங்கேற்ற பின் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என நான் கூறவில்லை – அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினேன் – அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை சீட் பாஜகவுக்கு தரப்படும் என்பன உள்ளிட்டவை குறித்து அமித் ஷாவிடம் பேசினேன் – அண்ணாமலை … Read more

அதிகரிக்கும் கரோனா | மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீலகிரி: அதிகரிக்கும் கரோனா தொற்றை எதிர் கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உதகை நகர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்து, 30 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் தனது 140-வது மாரத்தான் ஓட்டத்தினை மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா பெருந்தொற்று கடந்த 2019ம் ஆண்டு முதல் … Read more

'லாக் சாட்’ வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: இதன் பயன் என்ன?

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தில் சாட்களை லாக் செய்யும் ‘லாக் சாட்’ அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை … Read more

சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய திட்டம்!

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை சூரத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோடி பெயர் குறித்ததான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து கடந்த மாதம் 23-ம் தேதி தீர்ப்பளித்தது. அத்துடன் மேல்முறையீடு செய்யும் வகையில் ராகுல்காந்திக்கு 30 நாட்கள் ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி நாளை சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more

சட்டவிரோதமாக போதைப்பொருளை உற்பத்தி செய்யும் கோகோ-கோலா நிறுவனம்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

கோகோ-கோலா நிறுவனம் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் டொலர் மதிப்புள்ள தூய கோகனை சட்டவிரோதமாக உற்பத்தி செய்து விற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோகோ-கோலா நிறுவனம் உலகின் மிக பிரபல நிறுவனமான கோகோ-கோலா(coco-cola) நிறுவனம் அமெரிக்காவால் நிறுவப்பட்டது. இந்த பானத்தின் சுவை கோகா(coca) என்ற இலையிலிருந்து கிடைக்கிறது. இந்த இலைகளை கொண்டு கோகோ-கோலா பானத்திற்கான மூலப்பொருட்களை எடுக்கும் போது அதிலிருந்து தூய கோகோயினை(cocaine) உற்பத்தி செய்கிறது. இந்த மூலப்பொருள் தயாரிப்பு ஸ்டீபன் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு சிறிய … Read more

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்

சென்னை: தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குமரி, கோவை, நீலகிரி, நெல்லை, வேலூர், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் அதிக கவனம் தேவை என்று எல்.முருகன் கூறியுள்ளார்

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி.!

டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். அவதூறு வழக்கில் கோர்ட் சிறை தண்டனை வழங்கியதை அடுத்து ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி செய்யப்பட்டார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை … Read more

சீக்கிய கோவிலில் உலாவிய அம்ரித்பால் சிங் ஆலோசகர்| Counselor Amritpal Singh visited the Sikh temple

சண்டிகர்காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் ஆலோசகர் பப்பல்ப்ரீத் சிங், ஹோஷியார்புர் மாவட்டத்தில், சீக்கிய கோவில் ஒன்றில் சாதாரணமாக உலாவிய, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. பஞ்சாபில், ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின் வாயிலாக, மத தீவிரவாத பிரசாரத்தில் அம்ரித்பால் சிங் ஈடுபட்டு வந்தார். மேலும், பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கும் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கைது செய்யப்பட்ட தன் ஆதரவாளரை மீட்க, காவல் நிலையத்துக்குள் நுழைந்து அம்ரித்பால் சிங் வன்முறையில் … Read more

அது குறித்து த்ரிஷாவிடம் கேட்காதீங்க.. லியோ அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விருது விழாவில் லியோ படம் குறித்த ஹாட் அப்டேட்டை வெளிப்படையாக சொன்னது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. யூடியூப் சேனலான பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருது விழா நேற்று இரவு நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், நயன்தாரா, சிம்பு, பிரதீப் ரங்கநாதன், லோகேஷ் கனகராஜ், ஸ்ரேயா, ராஷி கன்னா, மிருணாள் தாகூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அதில் பங்கேற்றனர். நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கிய லோகேஷ் கனகராஜ் … Read more