கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ரோந்து படகை வைத்து இலங்கை கடற்படை மோதியதில் மீனவர்களின் விசைப்படகு சேதம் அடைந்துள்ளது.

அதிமுகவில் இருந்து விலகியதில் வருத்தம் தான் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி!

சென்னை: அதிமுகவில் இருந்து விலகியதில் வருத்தம் தான் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேட்டியில் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி என்னை அதிமுகவிற்கு அழைத்தார். எடப்பாடி பழனிசாமி எனக்கு நல்ல நண்பர் என்று அவர் தெரிவித்தார். பாஜகவில் தன்னுடைய நிலையை வெளிப்படுத்த நயினார் நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

2022-23ம் நிதியாண்டில் திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2022-23ம் நிதியாண்டில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு உண்டியலில் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.  கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் ரூ.1,450 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.  கடந்த 2021ம் ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 1.04 … Read more

வேஷ்டி அணிந்து வர வேண்டாம்| come with byjama

ராகுலின் எம்.பி., பதவி பறிபோனதை அடுத்து, சமீபத்தில் காங்கிரஸ், பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை கண்டன ஊர்வலம் நடத்தியது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற தென் மாநில எம்.பி.,க்களுக்கு, காங்., பொதுச் செயலர் வேணுகோபால் ஒரு உத்தரவிட்டாராம். ‘தயவு செய்து ஊர்வலத்தில் யாரும் வேஷ்டியில் வர வேண்டாம்; அனைவரும் குர்தா, பைஜாமா அல்லது பேன்ட் அணிந்து வர வேண்டும்’ என்றாராம். இப்படி திடீரென வேஷ்டியில் வர வேண்டாம் என சொல்லப்பட்ட நிலையில், திண்டாடிய சில தென் … Read more

Ameer And Yuvan Shankar Raja: மீண்டும் இணையும் எவர்க்ரீன் கூட்டணி – ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், இயக்குநர் அமீரும் புதிய படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அமீர். சேது படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்,. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் என்ற பெயரையும் அமீர் எடுத்திருக்கிறார். அவரது இயக்கத்துக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். மௌனம் பேசியதே சுமார் வரவேற்பு சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் அமீர். கடந்த 2001ஆம் ஆண்டு … Read more

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன்

• நாட்டின் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவேன். • போதைப் பொருள் பாவனையைத் தடுக்க கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவேன்• நாடு வன்முறையை நோக்கிச் செல்வதை தடுத்தமைக்கு நன்றி-பாதுகாப்பு துறையினருக்கு ஜனாதிபதி உரை. தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, … Read more

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்.. யாருக்கு, என்ன பயன்.. முழு விவரம் இதோ..!!

காவிரி ஆற்றை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுடன் இணைக்கும் திட்டம் தான் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டமாகும். இந்த திட்டத்துக்காக மொத்தம் 263 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்படவுள்ள நிலையில் மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக காவிரி கட்டளை கதவனை முதல் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் அமைக்கப்படவுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை … Read more

இந்த 10 மாநிலங்களில் இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்..!!

இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா செய்தியாளர்களிடம் பேசியதாவது, ”பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்ட்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்ப அலைகள் வீசும் நாட்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தென்னிந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் சில வடமேற்கு இந்தியப் பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் பொதுவாக இந்தக் காலகட்டத்தில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகரித்தே … Read more