பில்கேட்ஸ் காதலித்த இளம்பெண்ணுக்கு ரஷ்ய உளவாளியுடன் தொடர்பு: திடுக்கிடவைக்கும் ஒரு தகவல்


கோடீஸ்வரரான பில் கேட்ஸ் திருமணமாகி தன் மனைவியுடன் வாழும்போதே, ரஷ்ய இளம்பெண் ஒருவருடன் தொடர்பிலிருந்த விடயம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது நினைவிருக்கலாம்.

திடுக்கிடவைக்கும் தகவல்

உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், தனக்கு 55 வயது இருக்கும்போது, 2010ஆம் ஆண்டு, bridge game என்னும் ஒருவகை சீட்டு விளையாடும் பெண்ணான மிலா (Mila Antonova) என்னும் பெண்ணை சந்தித்துள்ளார்.

திருமணமாகி தன் மனைவியுடன் வாழ்ந்துவந்த பில் கேட்ஸுக்கும், தன் 20 வயதுகளில் இருந்த மிலாவுக்கும் அந்த விளையாட்டில் இருந்த ஆர்வம், பிறகு இருவருக்குள்ளும் தவறான உறவு உருவாவது வரை கொண்டு செல்ல, அந்த உறவு, அவரது திருமண வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது.

பில்கேட்ஸ் காதலித்த இளம்பெண்ணுக்கு ரஷ்ய உளவாளியுடன் தொடர்பு: திடுக்கிடவைக்கும் ஒரு தகவல் | Billgates Lover Linked To Russian Spy

இந்நிலையில், மிலாவுக்கும் ரஷ்ய உளவாளியான ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

யார் அந்த ரஷ்ய உளவாளி?

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டவர் அன்னா (Anna Chapman) என்ற பெண்.

இந்நிலையில், மிலாவும் ரஷ்ய உளவாளியான அன்னாவும் அமெரிக்காவின் மான்ஹாட்டனில் ஒன்றாக சுற்றித் திரியும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

விடயம் என்னெவென்றால், பில் கேட்ஸ் மிலாவுடன் தொடர்பிலிருந்த கால கட்டத்தில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

ஆனால், அனாவுக்கும் மிலாவுக்கும் என்ன தொடர்பு, எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. 

பில்கேட்ஸ் காதலித்த இளம்பெண்ணுக்கு ரஷ்ய உளவாளியுடன் தொடர்பு: திடுக்கிடவைக்கும் ஒரு தகவல் | Billgates Lover Linked To Russian Spy



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.