ஐஓஎஸ் 17 முதல் எக்ஸ்ஆர் ஓஎஸ் வரை – ஆப்பிளின் WWDC-ல் அறிமுகமாக வாய்ப்பு

கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (Worldwide Developers Conference = WWDC) இன்று (ஜூன் 5) இந்திய நேரப்படி இரவு 10:30 மணி அளவில் தொடங்குகிறது. ஆப்பிள் ஐபோன், மேக்ஸ், ஸ்மார்ட் வாட்ச், ஐபாட் மற்றும் ஆப்பிள் டிவிகளுக்கான புதிய இயங்குதளம் குறித்த அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் இந்த முறை இந்நிகழ்வில் ஐஓஎஸ் 17, மேக் ஓஎஸ் 14, வாட்ச் ஓஎஸ் 10, ஐபாட் ஓஎஸ் 17 மற்றும் டிவி ஓஎஸ் 17 அறிமுகமாகும் என தெரிகிறது.

முழுவதும் மென்பொருள் சார்ந்த இந்த நிகழ்வில் ரியாலிட்டி ஏஆர்/ விஆர் ஹெட்செட்டிற்கான எக்ஸ்ஆர் ஓஎஸ் அறிமுகம், 15 இன்ச் கொண்ட மேக் புக் ஏர், எம்2 சிப்செட், யூஎஸ்பி-சி ஏர்பாட் போன்றவையும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிகழ்வை தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் இலவசமாக பார்க்கலாம். இந்தப் புதிய மென்பொருள் துணையுடன் ஆப்பிள் சாதன பயனர்கள் தங்கள் சாதனங்களை புதிய மேம்பட்ட அம்சங்களுடன் பயன்படுத்த முடியும்.

ஆப்பிள் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகத்தில் உள்ள ஆப்பிள் பார்க்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்தியாவின் இந்தூரை சேர்ந்த 20 வயதான அஸ்மி ஜெயின், ஆப்பிளின் ஸ்விப்ட் ஸ்டூடன்ட் சேலஞ்சில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுகாதார பயன்பாடு சேர்ந்த செயலியை அவர் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

— Tim Cook (@tim_cook) June 5, 2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.