Maaveeran: மாவீரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்..அடேங்கப்பா..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் மாவீரன். மண்டேலா என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய இயக்குனரான அஸ்வின் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் இணைந்தது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க யோகி பாபு நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலும் பிரபல இயக்குனர் மிஸ்கின் இப்படத்தில் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

மாவீரன் சிவகார்த்திகேயன்

இந்நிலையில் தற்போது இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அதன்படி மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையில் வெளியாகின்றது. கடந்த வாராம் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கும்போதே இப்படம் சற்று வித்யாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது என நமக்கு தெரிகின்றது.

Kaavaalaa: காவாலா பாடலின் மூலமே கதையை கூறிய நெல்சன்..பாடலில் மறைந்திருக்கும் க்ளூஸ்..!

பாண்டஸி ஜானரில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தில் வித்யாசமான நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியுள்ளார் என்றும், அது ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன. எனவே அனைத்தும் மாவீரன் படத்திற்க்கு பாசிட்டிவாக இருப்பதால் இப்படம் கண்டிப்பாக வசூல் அளவிலும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சம்பளம்

இந்நிலையில் மாவீரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கியுள்ள சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது அதன்படி மாவீரன் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் 25 கோடி வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என ஒரு தகவல் வந்துள்ளது. தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது நேரடி தெலுங்கு படத்திலும் நடிக்க துவங்கியுள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

எனவே அவருக்கு தெலுங்கிலும் ஒரு மார்க்கெட் உருவாகி வருவதால் அவரின் சம்பளமும் படத்திற்கு படம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மாவீரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் 25 கோடி சம்பளமாக வாங்கியிருக்கலாம் என ஒரு கணிப்பு இருந்து வருகின்றது.ஆனால் இந்த தகவலில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.