சந்திரயான்-3 வெற்றி நம்பமுடியாத ஒரு சாதனை: உலக அழகி கரோலினா பிலாவ்ஸ்கா

புதுடெல்லி: சந்திரயான்-3 வெற்றி நம்பமுடியாத ஒரு சாதனை என்றும், இதற்காக இந்தியா மிகவும் பெருமைப்பட வேண்டும் என்றும் உலக அழகி கரோலினா பிலாவ்ஸ்கா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு வருகை தந்த அவர், பின்னர் புதுடெல்லி திரும்பி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “காஷ்மீருக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. காஷ்மீர் இந்த அளவு இயற்கை எழில் நிறைந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. காஷ்மீரின் இயற்கை அழகு என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது. காஷ்மீரில் … Read more

நீட் தேர்வு.. "இதுதான் உங்க ரகசியமா".. பிரச்சாரத்திலேயே நீ சொல்லிருக்கணும்.. கொதித்து பேசிய இபிஎஸ்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர் அண்மையில் கூறிய நிலையில், அதை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் . “உங்களிடம் நேர்மை இருந்திருந்தால் இந்த ரகசியத்தை பிரச்சாரத்தின் போதே நீங்கள் கூறியிருக்க வேண்டும்” என்றும் அவர் சாடியுள்ளார். சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். ஏற்கனவே நீட் தேர்வால் அடிக்கடி தற்கொலை நடந்து வரும் நிலையில், இந்த தற்கொலை சம்பவம் … Read more

நாத்திகனா.. இதுக்கெல்லாம் அஞ்சும் ஆள் நான் இல்லை… திருப்பதி தேவஸ்தான புதிய தலைவர் ஆவேசம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறக்கட்டளை தலைவராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த ஒய்.வி. சுப்பாரெட்டியின் பதவிக் காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து அந்தப் பதவியில்புதிய தலைவராக திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் பூமனா கருணாகர் ரெட்டி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 10 ஆம் பதவியேற்ற நிலையில் 24 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் அறிவித்தார். ஆனால் பூமனா கருணாகர் ரெட்டியின் நியமனத்திற்கும், அறங்காவலர் குழுவில் ஊழல் வழக்கில் … Read more

நாட்டுக் கோழி, மட்டன்… வெளுத்துக்கட்டிய இம்ரான் கான்… சிறையில் இவ்ளோ சொகுசு வசதிகளா?

உணவில் விஷம் கலக்கப்படலாம் என்பதால் வீட்டில் சமைத்த உணவை தர வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இம்ரான் கானுக்கு பல்வேறு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ​ ஆட்சியை இழந்த இம்ரான் கான்பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இம்ரான் கான். கடந்த ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஷ் … Read more

'ஜெயிலர்' படத்தின் வெற்றி எதிரொலி: 'தலைவர் 170' குறித்த ரஜினியின் அதிரடி முடிவு.!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தலைவர் 170’ படத்தில் ‘ஜெயிலர்’ சென்டிமென்ட்டை ரஜினி கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் பார்மூலா’ஜெயிலர்’ பட வெற்றியை தொடர்ந்து ‘தலைவர் 170’ பட வேலைகள் வேகமெடுத்துள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜெயிலரை போல் தனது அடுத்த படமும் மிகப்பெரிய ஹிட்டடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் ரஜினிகாந்த். இதற்காக ‘ஜெயிலர்’ பார்மூலாவை ‘தலைவர் 170’ படத்திலும் கொண்டு வர வேண்டும் என்ற … Read more

LPG Gas Price: மகிழ்ச்சி! சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறையலாம்

Gas Cylinder Price: சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறையும் என்ற எதிர்பார்ப்புகளும், அது சாத்தியம் தான் என்ற செய்தியும் சாமானிய மக்களுக்கு வயிற்றில் பால் வார்க்கும் விஷயமாக இருக்கிறது

என்ஐஏ சம்மன் ஏதும் அனுப்பவில்லை: நடிகை வரலட்சுமி சரத்குமார்

விழிஞ்சம் கடற்கரை ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரப்பப்படும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.   

அடிக்கடி பிளேயிங் லெவன் மாறுவது ஏன்? காரசாரமான கேள்விக்கு டிராவிட் ரியாக்ஷன்

இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்கிறது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, செப்டம்பர் 2 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிகெட் பயணத்தை தொடங்க இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய அணியில் அடிக்கடி பிளேயிங் லெவன் மாறிக் கொண்டிருப்பதற்கு பதில் அளித்தார். அவர் பேசும்போது, இந்திய அணியில் 4 … Read more

கண்டெக்டராகப் பணிபுரிந்த இடத்திற்கு திடீர் விசிட்; நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான `ஜெயிலர்’ படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது. உலக அளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது என்பதைப் படக்குழுவே அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தது. இதனிடையே ரஜினிகாந்த், இமயமலை, ஜார்க்கண்ட் உட்பட வடமாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமயமலையில் ஆன்மிகப் பயணமாகத் தொடங்கிய அது, பின்னர் அரசியல் தலைவர்களைச் சந்திக்கும் பயணமாகவும் மாறியது. இது குறித்த கேள்விக்கு, “இது நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே” என்று அவரே விளக்கம் … Read more

பிஸ்கட் பாக்கெட் மூலம் ரயிலில் கஞ்சா கடத்தல்

திருவனந்தபுரம் கேரளாவில் பிஸ்கட் பாக்கெட் மூலம் கஞ்சா கடத்தப்பட்டது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரயில்களில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலம் தண்பட்டில் இருந்து ஆலப்புழா வந்த ஆலப்புழா-தண்பட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர் அந்த ரயிலின் சாதாரண வகுப்பு பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 22 பிஸ்கெட் பாக்கெட்டுகள் இருந்தன. ரயிவ்லே காவல்துறையினர் அதை சோதனை செய்துபிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காவல்துறையினர் … Read more