பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து, அமெரிக்கா அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

டுனெடின், அமெரிக்கா- போர்ச்சுகல் டிரா 32 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் டுனெடின் நகரில் நேற்று நடந்த (இ பிரிவு) ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து 7-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான வியட்நாமை ஊதித்தள்ளியது. அந்த அணியில் எஸ்மீ புட்ஸ் (18-வது, 57-வது நிமிடம்), ஜில் ரோர்ட் (23-வது, 83-வது நிமிடம்) தலா 2 கோல் அடித்தனர். இதே பிரிவில் … Read more

ஜப்பானில் கானுன் புயல் எதிரொலி: 500-க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவானது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடந்தது. அப்போது 198 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே கனமழை பெய்யும் அபாயம் உள்ளதால் அங்கு தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் கானுன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக … Read more

சிறுமியை சிறார் வதை செய்த கணவன்; வீடியோ எடுத்த மனைவி – இன்ஸ்டாகிராமில் வீடியோவை விற்ற கொடூரம்!

கேரள மாநிலம் கொல்லம் குளத்துப்புழா பகுதியில் வாடகைக்கு வசித்து வருபவர் விஷ்ணு(31). விஷ்ணுவுக்கு கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் 15 சிறுமி ஒருவரிடம் அறிமுகம் ஆகி நட்பாக பழகினார். இருவரும் தங்கள் போட்டோக்களை மாறி மாறி பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செங்கன்னூரைச் சேர்ந்த ஸ்வீட்டி (20) என்பவரை விஷ்ணு காதலித்து திருமணம் செய்தார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ஆனாலும், விஷ்ணு சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: காஞ்சிபரத்தில் செப்.15-ம் தேதி முதல்வர் தொடங்கிவைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதுடன், செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று திட்டம் தொடங்கப்படும் என்றும் … Read more

மகாராஷ்டிராவில் கிரேன் சரிந்து விபத்து: 2 தமிழர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பாலம் கட்டும் பணியின்போது கிரேன் சரிந்து 2 தமிழர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து நாக்பூரை இணைக்கும் வகையில் 701 கி.மீ. தொலைவுக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சம்ரித்தி எக்ஸ்பிரஸ் வே என்றழைக்கப்படும் இந்த சாலை 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி 520 கி.மீ. தொலைவு சாலையை திறந்துவைத்தார். இரண்டாம் கட்டத்தில் … Read more

ஓசூர் டூ பெங்களூரு ஏசி மெட்ரோ… கவுன்ட்டவுன் ஸ்டார்ட்… தென்னிந்தியாவில் இதுதான் ஃபர்ஸ்ட்!

ஓசூரில் இருந்து பெங்களூரு நகருக்கு மெட்ரோ ரயிலில் குளுகுளு ஏசியில் பயணம் செய்ய ரெடியா? இந்த கேள்வி தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஹைலைட். தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் தினசரி எல்லைகளை கடந்து சென்று திரும்புபவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். பேருந்துகளில் கூட்ட நெரிசல்களில் சிக்கி தவிக்க வேண்டியதில்லை. மெட்ரோ ரயில் மூலம் விரைவாகவும், சொகுசாகவும் பயணிக்க முடியும். ​தமிழகம் டூ கர்நாடகா மெட்ரோஇந்த பகுதியில் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டை கிடுகிடுவென … Read more

Dhanush: இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்? அட இயக்குனர் இவர் தானா ?

​வெற்றிப்பாதைதனுஷ் என்னதான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தாலும் இடையில் சில காலம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். அவரது படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாகி தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக தனுஷின் மீதும் ஒரு சில விமர்சனங்கள் எழுந்தன. இந்த சமயத்தில் தான் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தனுஷை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. இதையடுத்து தமிழ் … Read more

‘மாமன்னன்’ படத்திற்கு ஒரு மாதம் கழித்து விமர்சனம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்…!

லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாமன்னன் படத்தை பாராட்டி விமர்சனம் கொடுத்துள்ளார். 

தகாத உறவில் ஈடுபட சொல்கிறார்! ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது பெண் பரபரப்பு புகார்!

தகாத உறவில் ஈடுபட தன்னை அழைப்பதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ பி ரவீந்திரநாத் மீது காயத்ரி தேவி எனும் பெண் பரபரப்பு புகார்.  

குடியரசுத் தலைவர் 247 மசோதாக்களுக்கு ஒப்புதல் : அமைச்சர் தகவல்

டில்லி குடியரசுத் தலைவர் 247 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக  மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில்  அளித்துள்ளார். அவர் அந்த பதிலில், ”கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து அனுப்பப்பட்ட 247 சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 24 மசோதாக்கள் குஜராத்தில் இருந்தும், 23 மசோதாக்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும், 22 … Read more