சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கும் சந்தானம்..? ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ நாயகன் சொன்ன சூப்பர் தகவல்..!

Samantha and Santhanam: நடிகர் சந்தானம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது நடிகை சமந்தா குறித்த விஷயங்களை அவர் பகிர்ந்து காெண்டார். 

‘வேலைக்கு தகுதியற்ற சோம்பேறி’ சக மருத்துவர்களின் கேலியால் கர்பிணி பயிற்சி மருத்துவர் தற்கொலை…

‘வேலைக்கு தகுதியற்ற சோம்பேறி’ என்ற மூத்த மருத்துவர்களின் கேலி பேசியதை அடுத்து மயக்கமருந்தை அதிகமாக எடுத்துக்கொண்ட கர்பிணி பயிற்சி மருத்துவர் உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பால சரஸ்வதி என்ற 27 வயது பயிற்சி மருத்துவர் 3 மாத கர்பமாக உள்ளார். மகளிர் மருத்துவ துறையில் (Gynecology) முதுநிலை பயிலும் இவரது ஆய்வு அறிக்கை ஏற்கப்படாமல் பலமுறை … Read more

The girl agrees to close the complaint against Brij Bhushan Singh | பிரிஜ் பூஷன் சிங் மீதான புகார் வழக்கை முடிக்க சிறுமி சம்மதம்

புதுடில்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான வழக்கில், டில்லி போலீசாரின் விசாரணை தனக்கு திருப்தி அளிப்பதாகவும், வழக்கை முடித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், புகார் கொடுத்திருந்த சிறுமி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., – எம்.பி.,யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனையருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ‘மைனர்’ சிறுமி உள்ளிட்ட சில … Read more

‛ஜெயிலர்' படத்தில் சிவராஜ் குமார் 11 நிமிடம் தான் வருவாரா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள திரைப்படம் ' ஜெயிலர்'. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரப், சுனில், யோகிபாபு, மிர்ணா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆக., 10ம் தேதி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஜெயிலர் ரிலீஸ் தேதி நெருங்குவதால் யு-டியூப்பில் புரொமோஷனுக்காக பேட்டி அளித்துள்ளார் சிவராஜ்குமார். அதில் அவர் கூறியதாவது, … Read more

Jawan: அனல் தெறிக்கும் ஜவான் படத்தின் Zinda banda பாடல்.. ஒரே நாளில் 36 மில்லியன் வியூசா!

மும்பை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, பிரியா மணி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் மூலம் அனிருத் இந்தியிலும் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்துள்ளார். முன்னதாக ஜூன் 3ம் தேதி ஜவான் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதத்திற்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப்

மைசூருவில் வக்கீலே இல்லாமல் கோர்ட்டில் தானே வாதாடி வெற்றிபெற்ற தொழில் அதிபர்

மைசூரு:- நில மோசடி மைசூரு டவுன் கே.ஆர்.மொகல்லா பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணப்பா நந்தா. தொழில் அதிபரான இவர் மைசூரு (மாவட்டம்) தாலுகா ராமனஹள்ளி அருகே பெலவாடி கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சொந்தமாக நிலம் வாங்க முயன்றார். அப்போது அவரை ‘டெரகான் ரெசிடன்சி’ என்ற நிறுவனம் தொடர்பு கொண்டது. மேலும் தங்களது நிறுவனம் சார்பில் வீட்டு மனைகள் விற்கப்படுவதாகவும், தலா ரூ.5.10 லட்சத்தை 3 தவணைகளாக ஒரு வருடத்தில் செலுத்தினால், அதற்கு அடுத்த வருடம் பத்திரப்பதிவு … Read more

கடைசி ஒரு நாள் போட்டி: இந்தியா அபார வெற்றி – தொடரையும் கைப்பற்றி அசத்தல்

தரோபா, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டது. இதே போல் அக்ஷர் பட்டேல், உம்ரான் மாலிக் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய … Read more

அமெரிக்கா: சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போயிங் தீயணைப்புத் துறை மற்றும் கிங் கவுண்டி தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுக்களும் பதிலளித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தினத்தந்தி Related Tags : … Read more

ஜடேரி நாமக்கட்டிக்கு தயாரிக்க தேவைப்படும் வெள்ளை மண்ணை இலவசமாக வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை: ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் வெள்ளை மண்ணை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைணவ வழிபாடு குறியீட்டில் ‘திருநாமம்’ முக்கியமானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிதிருவரங்கம், திருச்சி அடுத்த ஸ்ரீரங்கம், மதுரை கள்ளழகர் கோயில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி உள்ளிட்ட வைணவ திருத்தலங்களில் பக்தர்களின் நெற்றியில் திருநாமம் குறியீடு இருப்பதை காணலாம். மேலும் பல்லாயிரக்கணக்கான வைணவ பக்தர்கள், … Read more