சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான நிலையில், அடுத்ததாக கேங்ஸ்டர் கதைக்களத்தில் லியோ படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது தளபதி 68 படத்தில் இணையவுள்ளார்.