திருக்குறளை மட்டும் சொல்லி மக்களை பிரதமர் ஏமாற்றுகிறார் – முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யாமல் பிரதமர் திருக்குறளை மட்டும் மேற்கோள் காட்டுவது மக்களை ஏமாற்றக்கூடிய வேலை என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். 

ஆசிய கோப்பை: என்ன காலியா கிடக்கு? ரசிகர்களே இல்லாத மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதுகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை பார்க்க ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் இருந்தபோதும், டிக்கெட் விலை காரணமாக மைதானத்தின் கேலரிகள் காலியாக காட்சியளித்தன. டிக்கெட் விலை சர்ச்சை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் இம்முறை நடத்துகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதால் போட்டிகள் இப்போது இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் நிர்வாக முடிவுகளை பாகிஸ்தான் … Read more

Jailer: 300 பேருக்குத் தங்க நாணயம்; "உங்கள் அளவற்ற அன்புக்கு நன்றி" -இயக்குநர் நெல்சன் நெகிழ்ச்சி

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வியாழக்கிழமை வெளியான இத்திரைப்படம் 11,12, 13, 14 மற்றும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என சரியான விடுமுறை வீக்கெண்டில் திரைக்கு வந்தது இப்படத்திற்கு இன்னும் கூடுதல் சிறப்பாக அமைந்தது. இதனால் அந்த வீக்கெண்டில் ஒற்றை டைகராகக் களமிறங்கி பாக்ஸ் ஆப்ஸில் கலக்கியது ‘ஜெயிலர்’ திரைப்படம். மலையாள நடிகர் மோகன் லால், கன்னட … Read more

பிரதமர் மோடிக்கு ஜி 20 வெற்றிக்காக ஷாருக்கான் வாழ்த்து

டில்லி நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு இந்தியாவில் ஜி 20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜி-20 உச்சி மாநாட்டுக்கான இந்த ஆண்டு தலைமையை இந்தியா ஏற்று நடத்தியது. நேற்றும், இன்றும் டில்லியின் பாரத் மண்டபத்தில் உச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளில் சர்வதேச விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்கான தீர்மானம் நிறைவேறி வரலாற்று ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. பிறகு வந்திருந்த விருந்தினர்களுக்குப் பாரம்பரிய இசை கச்சேரியுடன் கூடிய, இரவு விருந்தும் வழங்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று ஜி-20 தலைமைத்துவம் … Read more

சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்.. ஒரே பதற்றம்.. ஆந்திரா முழுவதும் போலீஸ் குவிப்பு!

அமராவதி: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது வரும் 22 ஆம் தேதி அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து சந்திரபாபு நாயுடு, ராஜ முந்திரி சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் Source Link

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட விஜயலட்சுமி!

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை-28 என்ற படத்தில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அதன் பிறகு அஞ்சாதே, சரோஜா, பிரியாணி, வெண்ணிலா வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தற்போது ஜெயம் ரவி – நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் இறைவன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் விஜயலட்சுமி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருபவர், தற்போது தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். … Read more

லண்டன் கிளம்பினார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்| British Prime Minister Rishi Sunak left for London

லண்டன்: இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மனைவி அக்சதா மூர்த்தியுடன் டில்லி வந்தார். மாநாட்டில் பங்கேற்ற அவர், டில்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலிலும் வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசித்தார். தொடர்ந்து நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட ரிஷி சுனக் டில்லியில் இருந்து விமானம் மூலம் லண்டன் கிளம்பி சென்றார். லண்டன்: இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், … Read more

Jailer Success – ஜெயிலர் சக்சஸ்.. கார் மட்டும் இல்லை.. கோல்டு காயினும் பரிசுதான்.. அசத்திய கலாநிதி மாறன்

சென்னை: Jailer Success (ஜெயிலர் சக்சஸ்) ஜெயிலர் படம் பிரமாண்ட வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக தடுமாறிக்கொண்டிருந்த ரஜினிக்கு நெல்சன் திலீப்குமாரும், பீஸ்ட்டில் விழுந்த நெல்சன் திலீப்குமாரை

திருட முயன்றபோது உடலில் ஏறி இறங்கிய டிராக்டர் – மீண்டும் எழுந்து திருடிச்சென்ற நபர் | Viral Video

கண்காணிப்பு கேமரா வந்த பிறகு, திருட்டு போன்ற குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. திருடர்கள் திருடுவதற்கு வந்து எதுவும் கிடைக்காமல் கோபத்தில் எதையாவது உடைத்து போட்டுவிட்டுச் செல்லும் கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பார்க்கும்போது சிரிப்புதான் வரும். அந்த வகையில் குஜராத் மாநிலம், மொடாசா என்ற இடத்தில் இருக்கும் டிராக்டர் ஷோரூம் ஒன்றுக்கு நேற்று இரவு திருடன் ஒருவன் வந்தான். ஷோரூம் காம்பவுண்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றை திருடன் திருடுவதற்காக ஸ்டார்ட் செய்தான். நீண்டநேரமாக வண்டியை ஸ்டார்ட் செய்ய … Read more

"முரண்பாட்டின் மொத்த வடிவம் இண்டியா கூட்டணி" – ஜி.கே.வாசன் விமர்சனம்

மேட்டூர்: முரண்பாட்டின் மொத்த வடிவமாகவே இண்டியா கூட்டணி உள்ளது. அது கலப்படமான கூட்டணி அசல் கூட்டணி அல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வந்திருந்தார். தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தல் களத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். நவம்பர் மாதம் … Read more