ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: ஜி20 மாநாட்டில் பிரதமர் துவக்க உரை| G20 must work together: Prime Ministers opening address at G20 Summit

புதுடில்லி: ஜி20 நாடுகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். டில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் துவங்கிய ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றியதாவது: மாநாட்டிற்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மாநாட்டின் நடவடிக்கைகள் துவங்குவதற்கு முன்னர், மொராக்கோவில் நிகழ்ந்த பூமகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வோம். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு உதவ இந்தியா தயாராக … Read more

தமிழ் சினிமாவின் மற்றுமொரு வலி : தயாரிப்பாளர் தனஞ்செயன் வருத்தம்

தமிழ் சினிமாவில் சில முக்கிய படங்களின் வெளியீட்டுத் தேதிகளை கடைசி நிமிடத்தில் திடீர் திடீரென மாற்றி வருகிறார்கள். வரும் வாரம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாவதாக இருந்த 'சந்திரமுகி 2' படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 28ம் தேதிக்குத் தள்ளி வைத்துவிட்டார்கள். செப்டம்பர் 28ம் தேதியன்று “இறைவன், ரத்தம், பார்க்கிங், சித்தா,' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் அந்தப் போட்டியில் தற்போது 'சந்திரமுகி 2' படமும் இணைகிறது. இந்நிலையில் பெரிய கம்பெனிகளின் படங்களை இப்படி … Read more

மாரிமுத்து எப்படி என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்தாரு தெரியுமா?.. அஞ்சலி செலுத்திய வசந்த் உருக்கம்!

சென்னை: கேளடி கண்மணி படத்திற்கு மாரிமுத்து எழுதிக் கொண்டு வந்த வசனம் தான் அவரை உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்ள காரணம் என மாரிமுத்துவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இயக்குநர் வசந்த் உருக்கத்துடன் பேசிய பேச்சு ரசிகர்களை உருக வைத்துள்ளது. நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து தனது சொந்த ஊரில் இருந்து சினிமா ஆசை காரணமாக சென்னைக்கு ஓடி வந்த

பாகிஸ்தானின் 58வது பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக…

கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் செப். 07 இடம்பெற்ற பாகிஸ்தானின் 58வது பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் வரவேற்புரை ஆற்றினார். ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் தியாகிகள் … Read more

மீண்டும் கோவிட் பரவுமா? எச்சரிக்கும் WHO… தரவுகளைப் பகிர உலக நாடுகளுக்கு அறிவுறுத்தல்!

குளிர்காலத்தில் புதிய வகை கோவிட் பரவும் வாய்ப்புள்ளதால், மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை உலக நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று, உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்ட கோவிட்-19 தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து, தற்போது அதன் பரவல் கட்டுக்குள் உள்ளது. எனினும் சில நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ் திரிபுகள் பரவி, அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் … Read more

‘இண்டியா’ கூட்டணியை பிளவுபடுத்த முடியாது: திருமாவளவன் கருத்து

சென்னை: சனாதனம் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து ‘இண்டியா’ கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து கவன ஈர்ப்புக்காக பலர் பேசி வருகின்றனர். இதுபோன்ற எதிர்ப்புகளை பெரியார், அம்பேத்கர் என பலரும் சந்தித்துள்ளனர். அமைச்சர் முன்வைத்தது சனாதன சக்திகளுக்கு எதிரான கருத்தே தவிர, இந்துக்களுக்கு எதிரான கருத்தல்ல. சனாதன சக்திகள் என்றால் சமூகத்தில் நிலவும் பாலின, சாதியப் … Read more

ஜி20 உச்சி மாநாடு 2023 | பிரதமர் மோடி முன் வைக்கப்பட்ட ‘பாரத்’ பெயர்ப் பலகை

புதுடெல்லி: இந்தியா தலைமையேற்று நடத்திவரும் இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்னால் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. சனிக்கிழமை நடந்த முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் முன்னால் நாட்டினைக் குறிக்கும் வகையில் … Read more

ஹாரி பாட்டர் புத்தகத்தின் திருத்தப்படாத பிரதி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்

லண்டன்: உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் முதல் பாகத்தின் திருத்தப்படாத பிரதி இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.15 லட்சத்துக்கு மேல் ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. 1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிளாசஃபர்ஸ் ஸ்டோன்’ புத்தகம் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங். இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. 2007ஆம் ஆண்டு … Read more

இந்தியாவில் AI சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க என்விடியா உடன் இணைந்துள்ளது ஜியோ

மும்பை: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க நாட்டு சிப் மேக்கர் நிறுவனமான என்விடியா (NVIDIA) உடன் இணைந்துள்ளதாக முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்தியாவில் அதிக திறன் கொண்ட ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும் என என்விடியா தெரிவித்துள்ளது. அண்மையில் என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, ஏஐ … Read more

பிடிஆர் கிட்ட இந்த விஷயத்துல மோத முடியுமா? புள்ளி விவரத்துடன் புட்டு புட்டு வச்ச சம்பவம்!

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன்மொழிந்து அதனை ஆய்வு செய்ய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் அமித் ஷா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. ஓரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்புஒரே நாடு ஒரே தேர்தல் முன்மொழிவுக்கு காங்கிரஸ், திமுக என இந்தியா … Read more