செப்.,3 சனாதன நாளாக கடைப்பிடிக்கப்படும்: அமெரிக்க நகர மேயர் அறிவிப்பு| US city declares September 3 as Sanatana Dharma Day amid row in India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவில் சனாதானம் குறித்து உதயநிதி பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லி நகரில், செப்.,3 ம் தேதி சனாதான நாளாக கடைப்பிடிக்கப்படும் என அந்நகர மேயர் அறிவித்துள்ளார். லூயிஸ்வில்லியின் நகரில் நடந்த ஹிந்து கோயில் கும்பாபிஷேகத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற நகர துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித், சனாதான நாள் குறித்த மேயரின் அறிவிப்பை வாசித்தார். இந்த விழாவில் ஆன்மிக … Read more

Tamannaah – ஓவர் ஆட்டிட்யூட் காட்டினாரா தமன்னா?.. சன் பிக்சர்ஸ் பரிசு கொடுக்காததற்கு இதுதான் காரணமா?

சென்னை: Tamannaah (தமன்னா) தமன்னாவுக்கு சன் பிக்சர்ஸ் பரிசு கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் கொடுக்காததற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக தடுமாறிக்கொண்டிருந்த ரஜினிக்கு நெல்சன் திலீப்குமாரும், பீஸ்ட்டில் விழுந்த நெல்சன் திலீப்குமாரை

MG AStor – எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி பிளாக்ஸ்டார்ம் விற்பனைக்கு வெளியானது

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் எஸ்யூவி அடிப்படையில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிளாக்ஸ்டார்ம் எடிசன் ரூ.14.48 லட்சம் முதல் ரூ. 15.77 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு விதமான என்ஜினை பெறும் ஆஸ்டரில் 110 ஹெச்பி பவர் மற்றும் 150 என்எம், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும், சக்திவாய்ந்த 140 ஹெச்பி பவர் மற்றும் 220 என்எம், 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் 6 … Read more

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 02 ஆம் திகதி திருகோணமலை மதுரங்குடா கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் டிங்கி படகொன்று (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றினர். இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 செப்டெம்பர் 02 ஆம் … Read more

பாலியல் வழக்கு: செய்யாத குற்றத்துக்கு 47 ஆண்டுகள் சிறை; `Innocence' திட்டத்தின்கீழ் விடுதலையான நபர்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள கிரீன்பர்க்கில் 1975-ம் ஆண்டு பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த காவல்துறை, லியோனார்ட் மேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரைக் கைதுசெய்தது. அப்போது டி.என்.ஏ சோதனை சாத்தியமில்லை என்பதால், லியோனர்ட் மேக் மீது வழக்கு பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. விசாரணைக்குப் பிறகு, லியோனார்ட் மேக்குக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்கா இந்த நிலையில், அமெரிக்காவில் innocence எனும் திட்டத்தின் மூலம், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் … Read more

பாரத் என பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது: திமுக எம்.பி. கனிமொழி

சென்னை: “எல்லா திட்டங்களுக்கும் புரியாத பெயர்களை வைக்கும் ஒன்றிய அரசுக்கு, பாரத் என பெயர் மாற்றுவது சாதாரண ஒன்றாக தோன்றலாம். இப்படி பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று திமுக எம்பி, கனிமொழி கூறியுள்ளார். சென்னையில் திமுக எம்பி, கனிமொழி இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் திட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வாறு … Read more

சனாதன சர்ச்சை | தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது வழக்குப் பதிவு

ராம்பூர்: மத உணர்வுகளை சீர்குலைத்ததாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் வழக்கறிஞர்கள், கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடந்த கூட்டம் ஒன்றில் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காகவும், அவரின் கருத்துக்கு பிரியங்க் கார்கே ஆதரவு தெரிவித்ததற்காகவும் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக … Read more

சமூக வலைதளத்தில் வைரலாக வேண்டி உலகின் காரமான சிப்ஸ் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

பாஸ்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர், சமூக வலைதள சவால் ஒன்றில் பங்கேற்க வேண்டி உலகின் மிகவும் காரமான சிப்ஸை சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். சமீபத்தில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ’ஒன் சிப் சேலஞ்ச்’ என்ற சவால் ஒன்று டிரெண்ட் ஆகி வருகிறது. இதில் ‘பாகுய் (Paqui) என்ற உலகின் மிக காரமான சிப்ஸ் ஒன்றை சாப்பிட்டு அதனை வீடியொவாக பதிவு செய்து பகிர வேண்டும். இந்த சிப்ஸ் 18 வயதுக்கு … Read more

கோவையை அலறிவிடும் "தொடுறா பார்க்கலாம்" போஸ்டர்.. வெறித்தனத்தில் இறங்கிய திமுக

கோவை: அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டி வருவதற்கு உத்தரபிரதேச சாமியார் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவை முழுவதும் திமுகவினர் வெறித்தனமான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சனாதனத்தை டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு அதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. சனாதனம் என்பதற்கு இந்து மதம் என்ற ஒரு அர்த்தமும் இருப்பதால், இந்து மதத்தினரை அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். … Read more

உதயநிதி ஸ்டாலின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு… முதல் ஆளாய் உ.பி., செஞ்ச பரபரப்பு சம்பவம்!

தமிழக அமைச்சர் ஒருவர் பேசிய விஷயம் தான் தேசிய அளவில் பெரிதும் வைரலாகி கொண்டிருக்கிறது. இதனால் 2024 மக்களவை தேர்தல், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், ஒரே நாடு ஒரே தேர்தல், சி.ஏ.ஜி அறிக்கை, அதானி குழுமத்தின் மோசடி, இந்தியா கூட்டணியின் அரசியல் நகர்வு உள்ளிட்டவை ஓரங்கட்டப்பட்டு விட்டன. இத்துடன் நிற்காமல் புகார்கள், வழக்குப்பதிவு என விஷயம் சீரியசாக மாறி வருகிறது. சனாதன ஒழிப்பு தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி … Read more