பள்ளியில் சக மாணவியிடம் பேசியதால் ஆத்திரம்; மாணவனின் விரலை வெட்டிய இளைஞர்! – போலீஸ் விசாரணை

டெல்லி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் சக மாணவியிடம் பேசிய மாணவனின் விரலை, இளைஞர் ஒருவர் வெட்டிய சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதில், குற்றம்சாட்டப்படும் இளைஞர், சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவர் என்றும் பட்டம் பெற்றவர் என்றும் தெரியவந்திருக்கிறது. பள்ளி இது குறித்து வெளியான தகவலின்படி, கடந்த அக்டோபர் 21-ம் தேதியன்று துவாரகா தெற்கில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவன் தன் பெற்றோரிடம், பைக் சங்கிலியால் விரல் அறுபட்டுவிட்டதாக, தனக்கு நேர்ந்ததைப் பற்றிக் கூறாமல் … Read more

சிங்கார சென்னை 2.0 திட்டம்: பேரு பெத்த பேரு… கழுவ நீலு லேது..!

சென்னை: சுற்றுலா மற்றும் மருத்துவ சேவைகளுக்காக உலக மக்களை ஈர்க்கும் மையமாக சென்னை விளங்குகிறது. சென்னை மாநகரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு, அடிப்படை வசதிகள், தூய்மை ஆகியவற்றை வைத்தே தமிழகம் எப்படி இருக்கும் என அவர்கள் முடிவு செய்கின்றனர். அந்த அளவுக்கு சென்னை மாநகரம், தமிழகத்தின் முகமாகவே வெளி மாநிலத்தவராலும், வெளிநாட்டவராலும் பார்க்கப்படுகிறது. சுமார் 80 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகரில் உள்ளூரை சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூர், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என தினமும் சுமார் 10 … Read more

ராஜஸ்தானில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: காவல் உதவி ஆய்வாளர் கைது

தவுஸா: ராஜஸ்தானின் தவுஸா மாவட்டத்தில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் தவுஸா மாவட்டத்தின் லால்ஸாட் மாவட்டத்தில்தான் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. புபேந்திர சிங் என்ற நபர் குழந்தையை ஏமாற்றி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. உள்ளூர்வாசிகளின் தகவலின் பேரில் போலீஸார் அந்த நபரைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் … Read more

எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல்: ஐஸ்லாந்து நாட்டில் அவசர நிலை பிரகடனம்

ரெய்காவிக்: தொடர்ச்சியான நில அதிர்வுகளின் விளைவாக எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணமாக, ஐஸ்லாந்து நாட்டில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து (Iceland) நாட்டில், கடந்த 14 மணி நேரத்தில் 800 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டிருப்பதால் அங்கு எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில்தான் 14 மணி நேரத்தில் தொடர்ந்து சுமார் 800 முறை … Read more

PAK vs ENG: ராசியில்லாத பாபர்… பட்லர் வைத்த செக் – விளாசும் பாகிஸ்தான் ரசிகர்கள்..!

பாகிஸ்தான் அவுட் உலக கோப்பை 2023 தொடரில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடைசி லீக் போட்டியில் களம் கண்டுள்ளன. தொடரின் ஆரம்பத்தில் இருந்து மிக மோசமாக விளையாடிய இங்கிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், அடுத்து வர இருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக நெதர்லாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இப்போது பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் முனைப்பில் இருக்கிறது. மறுபக்கம், பாகிஸ்தான் அணிக்கு மையிரிலையில் நடப்பு உலக கோப்பை … Read more

தீபாவளி ஆஃபர்: 12ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா … MOTOROLA போனை இப்போதே வாங்கிடுங்க

MOTOROLA G54 5G ஆனது Flipkart இல் 27 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதாவது, பிளிப்கார்ட்டில் 12,150 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.   

ஆவின் பொருட்கள் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு! அமைச்சர் தகவல்…

நெல்லை: தமிழ்நாடு முழுவதும் ஆவின் பொருட்கள் விற்பனை  20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ், புதிதாக பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க  நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் கூறினார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு சிறப்பாக … Read more

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: துருப்பு சீட்டாக இருக்கும் தலித் சமூக வாக்குகள்! பாஜக – காங். வியூகம்

போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 38 சதவீதம் பேர் எஸ்.சி/எஸ்டி பிரிவினர் ஆவர். எனவே, தலித் சமூக ஓட்டுக்களை கவர பாஜகவும் காங்கிரசும் பல கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் Source Link

Rajasthan Cop Arrested For Raping 4-Year-Old, Locals Demand Strict Action | ராஜஸ்தானில் சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டருக்கு அடி, உதை: உறவினர்கள் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த சப் இன்ஸ்பெக்டரை பிடித்து சராமரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தின் லால்சோட் பகுதியில் நடந்துள்ளது. இங்கு தேர்தல் பணிக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங் நேற்று(நவ.,10) மதியம் சிறுமியை தன்னுடைய … Read more

1985 தீபாவளியில் வெளியான 9 படங்களில் 3 சூப்பர் ஹிட்

1985ம் ஆண்டு தீபாவளி தினம் நவம்பர் 11ம் தேதி அன்று வந்தது. அன்றைய தினத்தில் “கரையைத் தொடாத அலைகள், படிக்காதவன், பிரேம பாசம், ஜப்பானில் கல்யாணராமன், சமயபுரத்தாளே சாட்சி, ஆஷா, சிந்து பைரவி, சின்னவீடு, பெருமை” ஆகிய படங்கள் வெளிவந்தன. அத்தனை படங்களிலும் இன்றைக்கும் பேசப்படும், பெருமைப்படும் ஒரு 'கிளாசிக்' படமாக அமைந்த படம் 'சிந்து பைரவி'. கே பாலசந்தர் இயக்கத்தில், இளையராஜா இசையில், சிவகுமார், சுஹாசினி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். இசையை மையமாக … Read more