ஸ்ரீநகர் | புகழ்பெற்ற தால் ஏரியில் 5 படகு வீடுகள் தீக்கிரை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் புகழ்பெற்ற தால் ஏரியில் உள்ள சர்வதேச கவனம் பெற்ற படகு வீடுகள் சில தீக்கிரையாகின. இன்று (சனிக்கிழமை) காலை தால் ஏரியின் வாயில் எண் 9ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு வீடு ஒன்றில் பிடித்த தீ மளமளவென அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது. இதில் மொத்தமாக 5 வீடுகள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து படகு வீட்டின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “இன்று அதிகாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 … Read more

பிணை கைதிகளை விடுவிக்க பாலஸ்தீன குழு நிபந்தனை

ஜெருசலேம்: தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி நடத்திய திடீர் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின்போது இஸ்ரேலில் இருந்து சுமார் 240 பேரை காசாவில் உள்ள பாலஸ்தீனிய குழுக்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றன. இவர்களில் பெரும்பாலானோர் ஹமாஸ் பிடியில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஹமாஸுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடும் இஸ்லாமிக் ஜிகாத் என்ற சிறிய ஆயுதக்குழு தங்களிடம் 30 பிணைக் கைதிகள் இருப்பதாக ஏற்கெனவே … Read more

Pre-Diwali Liquor Sale: தீபாவளிக்கு முன்பே சூடுபிடித்த மதுபான விற்பனை.. 37% அதிகரிப்பு

Diwali Liquor Sale In Delhi:  டெல்லியில் தீபாவளிக்கு முன்பே இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்தமுறை மதுபான விற்பனை சராசரியாக 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

காேலாகலமாக நடைப்பெற்ற காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்த விழா! திருமணம் எப்போது?

Kalidas Jayaram Engagement: பிரபல நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்த விழா கோலாகலமாக நடைப்பெற்றது. 

இந்தியா vs நியூசிலாந்து: 23 ஆண்டுகளில் 4 வெற்றிகள் மட்டுமே…! பகையோடு காத்திருக்கும் இந்தியா

2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. நவம்பர் 15 ஆம் தேதி இப்போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் மோதும் இந்தியா கொஞ்சம் பயத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது. அந்த அணி 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை தோற்கடித்திருக்கிறது. அதனால் அந்த உலக கோப்பை கனவில் இருந்த இந்திய அணி வெறும் கையோடு திரும்ப வேண்டியிருந்தது. அதேநேரத்தில் இந்தியாவில் விளையாடும் நியூசிலாந்து அணிக்கும் … Read more

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் அருகே கடைகள் கட்ட தடை!

சென்னை: திருவண்ணாமலை கோயில் ராஜகோபுரத்தை மறைத்து தமிழ்நாடு அரசு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி வந்த நிலையில்,  கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த கடைகளை அகற்றி விட்டு, 6,500 சதுர அடியில், 151 கடைகளுடன், 40 அடி வரையிலான … Read more

பழைய வண்டிகள்.. \"ரோட்டுக்கு வந்துடுவோம்\".. வாகன வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்: சிஐடியு

சென்னை: சாலை வாகனங்களுக்கான வரி உயர்வைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்த வேண்டுகோள்களும், தமிழக அரசுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்டு வருவதால், பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் சாலை வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது.. அதுபோலவே, சரக்கு வாகனங்களுக்கு சுமைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோலவே, இறக்குமதி வாகனங்களுக்கும், பழைய Source Link

Song On Millets Featuring PM Modi Nominated For Grammy Award | பிரதமர் மோடி இயற்றிய பாடல் ‛கிராமி விருதுக்கு பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரதமர் மோடி இயற்றிய ‛ அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ என்ற பாடல், 66வது ‘கிராமி’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக, அந்த விருதை வழங்கும் அமைப்பு கூறியுள்ளது. உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டிற்கான 66வது ‛கிராமி விருதுகள்’ அடுத்த 85 நாட்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் … Read more

இறுதி கட்டத்தை எட்டிய விஷால் 34வது படத்தின் படப்பிடிப்பு!

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு காரைக்குடி, தூத்துக்குடி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. … Read more

Baakiyalakshmi serial: ஆயுசுக்கும் என்கிட்ட பேசாதே.. செழியனை வறுத்தெடுத்த பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மாலினி – செழியன் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் குழந்தையுடன் ஜெனி வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் பாக்கியாவை, ஈஸ்வரி மற்றும் கோபி திட்டித் தீர்க்கின்றனர். முன்னதாகவே அவர் இதுகுறித்து குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.