பிரேசிலுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் – பிரதமர் மோடி

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இன்சியோ லுலா டா சில்வா நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து அவர்கள் தமது கவலையை பகிர்ந்துகொண்டனர். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து பேசிய அவர்கள், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினர். மேலும் ஜி20 அமைப்பின் தலைமைப்பொறுப்பை வெற்றிகரமாக வகிப்பதற்கு பிரேசிலுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் என்றும் பிரதமர் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி..!

அகமதாபாத், 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-தென் … Read more

இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,249 கோடி நிதி உதவி

கொழும்பு, 2022-ல் இலங்கை வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டது, அதன் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் வீழ்ச்சியடைந்தது. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 4,690 கோடி அமெரிக்க டாலர்களாகும். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதிக்காக இலங்கை காத்திருக்கிறது. நாளை மறுதினம் (13-ந்தேதி) நிதி மந்திரி விக்கிரமசிங்கே இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் இலங்கையின் நிதி மற்றும் நிறுவனத் துறைகளை வலுப்படுத்த 15 கோடி அமெரிக்க டாலர்களை … Read more

Maruti eVX – மாருதியின் முதல் eVX எலக்ட்ரிக் எஸ்யூவி ஸ்பை படங்கள் வெளியானது

இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலான eVX படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்பாக பல்வேறு படங்கள் வெளிநாடுகளில் சோதனை செயப்பட்டதில் தற்பொழுது முதன்முறையாக இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகியுள்ளது. மாருதியின் eVX எஸ்யூவி கார் இந்திய சந்தையில் முதன்முறையாக 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம். அதனை தொடர்ந்து விற்பனைக்கு வெளியாக உள்ளது. Maruti Suzuki eVX electric SUV சோதனை ஓட்டத்தில் … Read more

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபம் திறைசேரிக்கு

  ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் இருந்து 350 மில்லியன் ரூபா, லங்கா போஸ்பேட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா, பி.சி.சி. நிறுவனம் 100 மில்லியன் ரூபா, தேசிய உப்பு நிறுவனம் 100 மில்லியன் ரூபா, இலங்கை சீமெந்துக் … Read more

தீபாவளி: வீட்டில் வழிபடுவது ஏன்? எப்படி? – எண்ணெய்க் குளியல், லட்சுமி பூஜை – உகந்த நேரம் என்ன?

தீபாவளி… நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான திருநாள். நாடெங்கும் கொண்டாடப்படும் இந்தத் திருநாள் பலவிதமான முக்கியத்துவங்களைக் கொண்டது. ஓர் ஆண்டு முழுவதும் உற்சாகமாக இயங்கத் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பது. ஆன்மிகம், பொருளாதாரம், ஆயுள், ஆரோக்கியம், அன்பு, நல்லுறவு இவை அனைத்தும் பெருக வகை செய்யும் வழிபாடுகளை உள்ளடக்கியது. அதனால்தான் நம் பாரத தேசம் எங்கும் தீபாவளி வெகு சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றி வழிபடும் நாள் … Read more

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை

சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணிகள் ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகளில் ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதால் சிறிய தீப்பொறிகூட மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்தும். எனவே, ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் பயணிகள் பட்டாசுகளை எடுத்துச் செல்லக் கூடாது. மீறி எடுத்துச் சென்றால் ரயில்வே சட்டம் 1989, பிரிவு 67, 164 மற்றும் 165-ன் கீழ் ஆயிரம் … Read more

‘என் மண்.. என் தேசம்’ பிரச்சாரத்தின்போது இந்தியாவில் அதிக செல்பிகள் பதிவு செய்யப்பட்டதாக கின்னஸ் சாதனை

புதுடெல்லி: என் மண் என் தேசம் பிரச்சாரத்தின்போது அதிக செல்பிகள் எடுத்து இணையத்தில் பதிவு செய்து உலக சாதனை படைத்ததாக இந்தியாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. என் மண் என் தேசம் பிரச்சார நிகழ்ச்சி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலேபல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாங்கள் கொண்டு வந்த மண் கலசங்களுடன் 10,42,538 பேர் செல்போனில் செல்பி எடுத்து பதிவு செய்தனர். இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனையாக பதிவு … Read more

”உலகத் தலைவர்கள் ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்கே கண்டனம் தெரிவிக்க வேண்டும்; எங்களுக்கு அல்ல” – இஸ்ரேல் பிரதமர்

டெல் அவிவ்: காசாவில் பொதுமக்களுக்கு நேரும் அவலங்களுக்கு ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் தான் பொறுப்பாகும். இஸ்ரேல் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பாகாது. உலகத் தலைவர்கள் ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்குத் தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எங்களுக்கு அல்ல என்று பிரான்ஸ் அதிபரின் அறிவுரைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் 36-வது நாளை எட்டியுள்ளது. காசாவில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் போர் நிறுத்தம் … Read more

வாணியம்பாடி கோர விபத்து! நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்.. 5 பேர் பலி

Bus Accident In Tamil Nadu: வாணியம்பாடி அருகே அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேரு மோதி விபத்து. இதில் 5 பேர் பலி மற்றும் 64 பேர் படுகாயம்.