Sri Lankan cricket team suspended: ICC orders | இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்: ஐ.சி.சி., உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது நடைபெற்று உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பெரும்பாலான போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருகிறது. இதனையடுத்து இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அறிவித்துள்ளது. தொடர்ந்து ஐ.சி.சி., இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அரசு தலையீட்டை கண்டித்து அந்த … Read more

Blue Sattai Maran Japan – JPN.. ஜாதிப் பற்று நடிகர்..கார்த்தியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்..?

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கும் ட்வீட் நடிகர் கார்த்தியை வம்பிழுப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். உலகமே இப்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பலர் யூட்யூப் சேனல்களை ஆரம்பித்து பல விஷயங்களை செய்துவருகின்றனர். அதில் ஒன்றுதான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது.

' அரசியல் எதிரிகள் யாரோ கடிதம் எழுதிய பிறகுதான்…’ – உயர் நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பு வாதம்

சென்னை: அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையில் தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது என தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு … Read more

டெல்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பஞ்சாப் உள்ளிட்ட டெல்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அசாதுதீன் அமனுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சஞ்சய் கிஷன், “காற்று மாசுபாடு பிரச்சினை … Read more

அமெரிக்க மருத்துவர்களின் உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை…

அமெரிக்காவின் நியூயார்க் நகர மருத்துவர்கள் உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சையை நிகழ்த்தியுள்ளனர். இதுவரை ஒரு சில வகையான பார்வை இழப்புகளுக்கு மட்டும் பொதுவாக கார்னியா (Cornea) மாற்று அறுவை சிகிச்சை – – கண்ணுக்கு முன்னால் உள்ள தெளிவான திசு – செய்யப்பட்டு வந்தது. ஒரு முழு கண்ணையும் – கண் பார்வை, அதன் இரத்த நாளங்கள் மற்றும் மூளையுடன் இணைக்க வேண்டிய முக்கியமான பார்வை நரம்பு – மாற்றி அறுவை சிகிச்சை … Read more

சத்தீஸ்கரில் கரைசேருமா காங்கிரஸ்? வெற்றியை தீர்மானிக்கும் வாக்குறுதிகள்! நிறைவேற்ற தவறியவை என்னென்ன?

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதேபோல இந்த முறை காங்கிரஸா? பாஜகவா? யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது. இதற்கான விடை தேர்தல் வாக்குறுதிகளில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்த அளவில், மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் Source Link

Aiyan mobile app for Sabarimala pilgrims | சபரிமலை யாத்ரீகர்களுக்கு அய்யன் மொபைல் செயலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 2023-24 ஆம் ஆண்டிற்கான மகர விளக்கு திருவிழாவின் ஒரு பகுதியாக சபரிமலை யாத்ரீகர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் ‘அய்யன்’ மொபைல் செயலியுடன் வனத்துறையினர் இந்த செயலியை பெரியாறு புலிகள் காப்பக மேற்கு கோட்டத்தின் தலைமையில் உருவாக்கியுள்ளனர் பம்பா, சன்னிதானம், சுவாமி அய்யப்பன் சாலை, பம்பா-நீலிமலை-சன்னிதானம் எருமேலி-அழுதக்கடவு-பம்பா, சத்திரம்-உப்புப்பாறை-சன்னிதானம் ஆகிய வழித்தடங்களில் கிடைக்கும் சேவைகள் இந்த செயலி மூலம் கிடைக்கும். பாரம்பரிய கானக வழித்தடங்களில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ அவசர … Read more

பிரித்விராஜ் படத்திற்காக குருவாயூர் கோவில் செட் அமைப்பதை தடுத்த நகராட்சி அதிகாரிகள்

கடந்த வருடம் மிகச்சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் மலையாளத்தில் வாரிக்குவித்த படம் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'. அறிமுக இயக்குனர் விபின் தாஸ் என்பவர் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அவர் 'குருவாயூர் அம்பலநடையில்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தில் கதாநாயகனாக நடித்தவரும் மின்னல் முரளி பட இயக்குனருமான பஷில் ஜோசப் கதாநாயகனாக நடிக்க, மிக முக்கியமான … Read more

‘கேப்டன் மில்லர்’ இப்போ ரிலீஸாவது 2வது பாகம்.. இயக்குநர் கொடுத்த தரமான அப்டேட்!

சென்னை: கேப்டன் மில்லர் படம் 3 பாகமாக உருவாகும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையில் வெளியாக