`முடிந்த கதை தொடர்வதில்லை!' – `அதிமுக-பாஜக' கூட்டணி குறித்த வாசன் கருத்துக்கு ஜெயக்குமார் பதிலடி!

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் சாசன் ரசாயன தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று, புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “காலாப்பட்டு தொழிற்சாலையில் பல்வேறு விபத்துகள் நடந்திருக்கின்றன. தற்போது ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் குடும்பங்கள் தவித்து வருகின்றன. பா.ஜ.க கூட்டணி அரசு, இந்த தொழிற்சாலைக்கு ஏன் தடை போடவில்லை… இந்த நிறுவனத்தால் நான்கு கிராமங்கள் பாதிக்கப்பட்டு, மக்கள் மறியல் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: நேற்று (நவ.08) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (நவ.09) அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், … Read more

“நிதிஷ் குமார் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது” – ப.சிதம்பரம் கருத்து

ஜெய்ப்பூர்: நிதிஷ் குமார் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாதது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவையில் பெண் கல்வி குறித்துப் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், ஆண் – பெண் சேர்க்கை குறித்து அநாகரிகமான முறையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் மாநில பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், தான் அவ்வாறு … Read more

அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டி கொடுத்த ஷாக்.. பரணிக்கு தெரிய வரும் உண்மைகள்..!!

Zee Tamil Anna Serial Episode: சௌந்தரபாண்டி கொடுத்த ஷாக்.. பரணிக்கு தெரிய வரும் உண்மைகள்? – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து தானா…? பழிதீர்க்க காத்திருக்கும் ரோஹித் & கோ!

NZ vs SL Match Highlights: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெற ஒரு முக்கியமான போட்டியாக நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய லீக் போட்டி அமைந்தது. இரு அணிகளுக்கும் இது கடைசி போட்டி என்பதாலும், இரு அணிகளும் வெவ்வேறு அழுத்தத்தின் கீழ் விளையாடியது. முன்பு கூறியது போல் நியூசிலாந்து அரையிறுதி சுற்றை குறிவைத்தும், இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபியை குறிவைத்தும் இந்த போட்டியை எதிர்கொண்டன.  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் … Read more

தீபாவளி படங்களுக்குச் சிறப்புக் காட்சிகள் – அனுமதித்த நேரத்துக்குள் 5 காட்சிகள் ஓட்டுவது சாத்தியமா?

தீபாவளி கொண்டாட்டமாக கார்த்தியின் `ஜப்பான்’, ராகவா லாரன்ஸின் `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, விக்ரம் பிரபுவின் `ரெய்டு’, காளி வெங்கட் நடித்த `கிடா’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. இதில் கார்த்தி, லாரன்ஸின் படங்களுக்கு நாளை முதல் அதாவது நவம்பர் 10ம் தேதி முதல், வருகிற 15ம் தேதி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யா – லாரன்ஸ் இதற்கு … Read more

10 கோடி போலி பயனாளிகளை நீக்கிய பாஜக அரசு : மோடி பெருமிதம்

சட்னா பாஜக அரசு 10 கோடி போலி பயனாளிகளை நீக்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வரும் 17 ஆம் தேதி அன்று மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இன்று சட்னாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் அவர் தனது உரையில், ”எனது அரசு ஏழை மக்களுக்காக 4 கோடி கான்கிரீட் வீடுகளைக் கட்டியுள்ளது. என்றாலும் எனக்காக ஒரு வீடுகூட … Read more

இதுதான் \"மோடி\" வெடி.. டைப் டைப்பாக வெடிக்குமாம்! தீபாவளி ஸ்பெஷலாக இறங்கிய புது பாம்! சூப்பரா இருக்கே

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அங்கே தீபாவளி பட்டாசு சந்தையில் வந்துள்ள மோடி வெடி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை இப்போது அசோக் கெலாட் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு மொத்தம் Source Link

New Zealand beat Sri Lanka by 5 wickets | இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் இஷ் சோதிக்கு பதிலாக பெர்குசன் இடம் பெற்றார். இலங்கை அணியின் ரஜிதா நீக்கப்பட்டு சமிகா கருணாரத்னே சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார். … Read more

அசோக் செல்வன் பிறந்தநாளில் கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட பதிவு!

சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்குமிடையே ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வந்தபோது காதல் ஏற்பட்டு, கடந்த செப்டம்பர் 13ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் நவம்பர் எட்டாம் தேதியான நேற்று அசோக் செல்வன் தனது 34வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் … Read more