உசிலம்பட்டி, திருமங்கலம் விவசாயிகள் நலனுக்காக வைகை நீரைத் திறக்க வேண்டும்: வைகோ
உசிலம்பட்டி: உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்கென வைகை அணை நீரைத் திறக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் பகுதியில் போதிய மழையின்றி இருப்பதால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். வைகை அணையிலிருந்து திறக்கப்படும் திருமங்கலம் பிரதான கால்வாய் மற்றும் 58 கிராமக் கால்வாய் தண்ணீரால் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், 160 குளங்கள், 200-க்கும் மேற்பட்ட ஊரணிகள் நிரம்பும். … Read more