புதுச்சேரியில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி 

புதுச்சேரி புதுச்சேரியில் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி நாடெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. ஆண்டு  தோறும் தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. அதுவும் பசுமை … Read more

Bathing in the temple pond is a certificate of absolution | கோவில் குளத்தில் குளித்தால் பாவ விமோசன சான்றிதழ்

பிரதாப்கர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்களை போக்குவதற்காக கோவில் குளத்தில் குளித்தால், பாவ விமோசன சான்றிதழை வழங்குகிறது ராஜஸ்தானில் உள்ள ஒரு சிவன் கோவில். மகாதேவ் மந்திர் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் கோதமேஸ்வர் மகாதேவ் மந்திர் என்ற சிவன் கோவில் உள்ளது. அங்குள்ள குளத்தில் குளிப்பவர்களுக்கு பாவ விமோசனம் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளதாவது: மகரிஷி கவுதமர், தெரியாமல் … Read more

சோசியல் மீடியாவில் இருந்து தற்காலிகமாக விலகிய இயக்குனர் ரத்னகுமார்

மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கியவர் ரத்னகுமார். அதையடுத்து மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டபோது, ‛‛எவ்வளவு உயர பறந்தாலும் பசிச்சா கீழே இறங்கி வந்து தான் ஆக வேண்டும்'' என்று பேசி இருந்தார். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை பேசியிருந்தார் ரஜினி. இதுபற்றிய சர்ச்சை ஓடிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு பதிலடி … Read more

Mansoor Ali Khan: “லியோ பிளாஷ்பேக்ல ஏன் பொய் சென்ன..” நள்ளிரவில் மன்சூர் அலிகானை மிரட்டிய ரசிகர்கள்!

சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம், கடந்த மாதம் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்த லியோ, தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனையடுத்து இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், ரசிகர்கள் நடு ராத்திரியில் போன் போட்டு மிரட்டுவதாக மன்சூர் அலிகான்

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்; பா.ஜ.க.வின் 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி, தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 9-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, ராஜஸ்தானில் நவம்பர் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அடங்கிய 3-வது பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டு உள்ளது. 58 வேட்பாளர்கள் அடங்கிய இந்த பட்டியலில், முன்னாள் எம்.எல்.ஏ. அஜித் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்: சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தல்..!

மும்பை, 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடுத்த பந்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் சுப்மன் கில்லுடன் … Read more

அண்டார்டிகாவில் புதிய ஆய்வு தளம் அமைக்க சீனா திட்டம்

பீஜிங், அண்டார்டிகாவில் புதிய ஆராய்ச்சி மையம் ஒன்றை கட்டியெழுப்ப சீனா திட்டமிட்டு உள்ளது. ராஸ் கடலின் கடலோர பகுதியில் 5-வது ஆராய்ச்சி மையத்திற்கான கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியை வருகிற 2024-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் நிறைவு செய்வது என சீனா திட்டமிட்டு இருக்கிறது. இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதற்காக 80 சீன மையங்களை சேர்ந்த 460 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் அடங்கிய சரக்கு … Read more

நெல்லை: தொடரும் சாதியக் கொடூரங்கள்; `ஆறாத' வன்கொடுமை `வடுக்கள்!' – தீர்வு எப்போது?

திருநெல்வேலி மாநகரத்துக்குட்பட்ட மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள். அப்போது, ஆறு பேர் கொண்ட ஒரு சாதிவெறிக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அந்த இரு இளைஞர்களையும் வழிமறித்துத் தாக்கியிருக்கிறது. அவர்களிடமிருந்து செல்போன்களையும் அந்த கும்பல் திருடிச் சென்றிருக்கிறது. தாக்குதலில் காயமடைந்தவர் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அந்த இரு இளைஞர்களை வழிமறித்து, அவர்களின் சாதியை அந்தக் கும்பல் கேட்டிருக்கிறது. தாங்கள் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அந்த இளைஞர்கள் சொன்னவுடன், … Read more

இலவச வேட்டி, சேலைக்குப் பதிலான நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும்: விடுதலை நாளில் புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: அனைத்து பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500 வரும் தீபாவளி முதல் ரூ.1.000-ஆக உயர்த்தப்பட்டு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று (புதன்கிழமை) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விடுதலை நாள் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கனமழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவி வருகின்றது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், … Read more