Court orders Election Commission to submit donation details | நன்கொடை விபரங்களை சமர்ப்பிக்க தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் உத்தரவு

புதுடில்லி,:தேர்தல் பத்திர விற்பனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 2023, செப்., 30 வரை அரசியல் கட்சிகள் பெற்றுள்ள நன்கொடை விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தேர்தல் பத்திரம் அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுகளுக்கான நன்கொடையை பெறுவதற்கு, தேர்தல் பத்திர விற்பனையை மத்திய அரசு 2018ல் நடைமுறைப்படுத்தியது. எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாயிலாக தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தனிநபர்கள், ஒன்றுக்கும் … Read more

மம்முட்டி, மோகன்லாலுடன் இணைந்து ‛கேரளியம்' நாளை கொண்டாடிய கமல்

கேரளாவில் வருடந்தோறும் ‛கேரளியம்' நாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளா பிறந்த தினமான நவ-1ம் தேதியைத் தான் இந்த பெயரில் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவின் 67வது கேரளியம் நாள் நேற்று திருவனந்தபுரத்தில் கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசே செய்திருந்தது. இந்த நிகழ்வில் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டியுடன் சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து சென்று நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும் … Read more

Leo Success Meet: சன் டிவியில் விஜய்யின் லியோ சக்சஸ் மீட்… தாறுமாறாக வெளியான ப்ரொமோ!

சென்னை: விஜய்யின் லியோ வெற்றி விழா கொண்டாட்டம் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால் ஏமாற்றத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு, சக்சஸ் மீட் நடந்தது ஆறுதலாக அமைந்தது. அதேநேரம் லியோ சக்சஸ் மீட்டை நேரில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் பலர் கவலையில் இருந்தனர். இந்நிலையில், லியோ சக்சஸ் மீட் சன் டிவியில்

காங்கிரசும், வளர்ச்சியும் ஒன்றாக இணைந்திருக்க முடியாது: பிரதமர் மோடி

காங்கர், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 9-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி சத்தீஷ்காரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில் முதல் கட்டத்தில் 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்டத்தில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஷ்காரில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் … Read more

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி

மும்பை, 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. தனது முதல் 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாத ஒரே அணியான இந்தியா 12 புள்ளிகளுடன் கம்பீரமாக வலம் வருகிறது. அரைஇறுதியை வெகுவாக நெருங்கி விட்ட இந்திய அணி இன்னும் ஒரு வெற்றி … Read more

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்; அறிவிப்பு வெளியீடு

கராச்சி, பாகிஸ்தானில் 2022-ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வழியே நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்நாட்டில், அரசியல் நிலைத்தன்மையற்ற நிலை நீடித்து வருகிறது. இதன்பின்பு, அந்நாட்டு நாடாளுமன்றம் நடப்பு ஆண்டின் ஆகஸ்டு 9-ந்தேதி கலைக்கப்பட்டது. ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்தது. இதன்பின்பு, 90 நாட்களுக்குள் நாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறி தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன. ஆனால், தேர்தல் நடத்துவது தள்ளி … Read more

Mohammed Shami: மூன்று போட்டிகள், இரண்டு ஃபைஃபர், இரண்டு ஆட்டநாயகன்; இது ஷமியின் சிறப்பான சம்பவம்!

“நான் பென்ச்சிலிருந்து எல்லாவற்றையும் பார்த்துகொண்டுதான் இருந்தேன். வாய்ப்பு கிடைக்காத சமயங்களில் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். நமக்கென எதாவது போட்டிகள் கிடைத்தால்தான் நம்மை நிரூபித்துக் காட்ட முடியும். ஆனால், அப்படியான சூழலிலும் உங்கள் அணி சிறப்பாகச் செயல்படுகிறதெனில், உங்கள் சக பௌலர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் எனில் நாம் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களின் வெற்றிக்கும் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.” Shami தரம்சாலாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் ஹாலை எடுத்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் … Read more

டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு, விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு … Read more

தேர்தல் பத்திரம் திட்டத்தில் விதிமீறல் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை. யாருடைய உரிமையும் மீறப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. … Read more

தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை… திருமணமாகி 3 நாள்களில் கொடூரம்!

Thoothukudi Couple Murder: திருமணமாகி மூன்றே நாள்களான தம்பதியை பெண்ணின் குடும்பத்தினர் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.