விஜய்க்கும், பஹத் பாசிலுக்கும் இருக்கும் தொடர்பு : லோகேஷ் கனகராஜை ஆச்சரியப்பட வைத்த தியரி
லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய விக்ரம் படத்தில் அதற்கு முன்பு அவர் இயக்கிய கைதி பட கதாபாத்திரங்களை அழகாக உள்ளே நுழைத்து ஆச்சரியப்படுத்தினார். அதற்கு எல்சியு என ரசிகர்களே பெயர் சூட்டி, அடுத்து விஜய்யின் லியோ படம் வெளியாவதற்கு முன்பு கூட அதிலும் கைதி, விக்ரம் கனெக்சன் எப்படியெல்லாம் இருக்கும் என ஆருடம் கூறி வந்தனர். அதற்கேற்றபடி லியோ படத்தின் இறுதியில் கமல்ஹாசன் விஜய்யுடன் பேசுவது போன்று படத்தை முடித்து எல்சியுவை தொடர்புபடுத்தி இருந்தார் லோகேஷ் கனகராஜ். … Read more