மழை காரணமாக 'டல்' முன்பதிவுகள்

2023ம் ஆண்டின் கடைசி மாதம் இன்று ஆரம்பமாகிவிட்டது. இன்று வெளியான படங்களில் நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி', ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்', தர்ஷன் நடித்துள்ள 'நாடு' ஆகிய படங்கள் குறிப்பிடும்படியான படங்களாக அமைந்துள்ளன. இந்தப் படங்களுக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. படம் வெளியான இன்றைய முதல் நாளில் கூட ஒரு தியேட்டர் கூட ஹவுஸ்புல் ஆகவில்லை. மழையின் காரணமாக மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதைத் தவிர்த்து வருகிறார்கள். பொதுவாக … Read more

In India! UN Climate Change Conference in 2028… | இந்தியாவில்! 2028ல் ஐ.நா., பருவநிலை மாநாடு… துபாயில் முன்மொழிந்தார் பிரதமர் மோடி

துபாய் சி.ஓ.பி., 28 எனப்படும், ஐ.நா.,வின் 28வது பருவநிலை மாநாட்டை துபாயில் நேற்று துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, 2028ல் நடக்கும் 33வது ஆண்டு மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து முன்மொழிந்தார். வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், 28வது ஐ.நா., பருவநிலை உச்சி மாநாடு நேற்று துவங்கியது. இதை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். சி.ஓ.பி., 28ன் தலைவர் சுல்தான் அல் ஜபர் மற்றும் ஐ.நா., பருவநிலை மாற்ற தலைவர் … Read more

விவசாய பண்ணை.. ஐடி கம்பெனி.. அமெரிக்காவில் ராஜபோக வாழ்க்கை வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு!

சென்னை: அரசியல் சினிமா என மாஸ் காட்டிவந்த நடிகர் நெப்போலியனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு ரசிகர்களும், நண்பர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருச்சியை பூர்வீகமாக கொண்ட நெப்போலியன் 1963ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் குமரேசன் துரைசாமி. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், சினிமா மீதும்

நவம்பரில் ஜிஎஸ்டி வரி 15% அதிகரிப்பு

புதுடெல்லி, கடந்த நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் ஆகும். இருப்பினும், கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத வசூல் குறைவு ஆகும். 2023-24-ம் … Read more

ஐபிஎல் 2024; ஏல பட்டியலில் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட 1,166 வீரர்கள் பங்கேற்பு!

மும்பை, இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன. இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல … Read more

துபாயில் இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

துபாய், சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவில் இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து துபாயில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டின் அமர்வுகளுக்கு மத்தியில் இலங்கை … Read more

Bajaj Auto – நவம்பர் 2023ல் பஜாஜ் ஆட்டோ விற்பனை 31 % உயர்வு

இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2023 பண்டிகை காலத்தில் 4,03,003 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பீடுகையில் 31 % வளர்ச்சி அடைந்துள்ளது. 2023 நவம்பரில் 3,06,719 ஆக இருந்த மொத்த வாகன விற்பனையில் 2023 நவம்பரில் 4,03,003 ஆக  எட்டிய அதன் மொத்த வாகன விற்பனையில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. Bajaj Auto Sales report November 2023 பஜாஜ் முந்தைய மாதத்தில் மொத்த உள்நாட்டு விற்பனை … Read more

“சரத் பவார்தான் பாஜக அரசில் சேர சொன்னார்..!” – பற்ற வைத்த அஜித் பவார்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்துள்ளது. தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் யாருக்கு என்ற போட்டி சரத் பவார் மற்றும் அஜித் பவார் இடையே எழுந்துள்ளது. இரு தரப்பினரும் இதற்காக தேர்தல் கமிஷனில் மனு கொடுத்து இருக்கின்றனர். அம்மனு மீது விசாரணை நடந்து வருகிறது. தேர்தல் கமிஷனில் நடக்கும் விசாரணை தொடர்பாக இரு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேசமயம் வரும் … Read more

மழைக்காலத்தையொட்டி தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 2 ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களும், 100 இடங்களில் மருத்துவ காப்பீடு முகாம்களும் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. கடந்த அக்டோபர் 23-ம் தேதி தொடங்கி, ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. … Read more