சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது. ஜார்க்ண்ட் மாநிலத்தில் அதிகாரத்தை தவறாக உபயோகப்படத்தி சுரங்க முறைகேடு செய்ததாக அம்மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் பல முறை விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவரை அதிரடியாக கைது செய்தனர். […]