ஜார்க்கண்ட் முதல்வராக ஜெ.எம்.எம். கட்சியைச் சேர்ந்த சம்பை சோரன் இன்று பிற்பகல் பதவியேற்றக் கொண்டார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் புதன்கிழமையன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பை சோரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 43 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க புதனன்று மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் உரிமை […]