விஜய் கட்சி தொடங்கினார்: தமிழக வெற்றி கழகம்: ரசிகர்கள் கொண்டாட்டம்: இடம்: பெரம்பூர், சென்னை
சேலம்: `தமிழக வெற்றி கழகம்’ அறிவிப்பு… விஜய் ரசிகர் மன்றம் சார்பாக பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
விஜய் கட்சி தொடங்கினார்: தமிழக வெற்றி கழகம்: ரசிகர்கள் கொண்டாட்டம்: இடம்: ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் விஜய் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!








மதுரையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!
தமிழக வெற்றி கழகம் என இன்று தன் கட்சியின் பெயரை நடிகர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மதுரையில் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இன்று மதுரை மாநகர் தெற்கு மாவட்டத் தலைவர் தங்கபாண்டியன் தலைமையில், மதுரை மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பிலுள்ள விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்தும், நடிகர் விஜய் படத்திற்கு தீபாராதனை காண்பித்தும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுடன் கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.