வீடுகளில் வீணாகும் உணவு மூலம் 100 கோடி மக்களின் பசியை தீர்க்கலாம்: ஐ.நா. அறிக்கை வெளியீடு

புதுடெல்லி: உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் 5-ல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் 63 கோடி டன், உணவகங்களில் 29 கோடி டன், சில்லறை கடைகளில் 13 கோடி டன் என உலக அளவில் 105 கோடி டன் உணவு விரயம் செய்யப்படுகிறது. வீடுகளில் ஒரு நாளைக்கு 100 கோடி உணவுகள் வீணாக்கப்படுகின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, உலக அளவில் வீடுகளில் ஒரு … Read more

கோடை விடுமுறை: சென்னையில் இருந்து கோவைக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு…

சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவைக்கு 2 சிறப்பு ரெயில்கள் இய்க்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.  இந்த சிறப்பு ரயில்  பெரம்பூரில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ரெயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் … Read more

விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா தமிழில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர். ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். தற்போது குறிப்பிட்டு சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால், அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இதனால் அவர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் நிதிலனை அழைத்து நயன்தாரா … Read more

25 வயசுலயே தெரிஞ்சுடுச்சு எனக்கு கல்யாணம் செட் ஆகாதுன்னு.. டேனியல் பாலாஜி உருக்கமாக சொன்ன விஷயம்!

சென்னை: மறைந்த நடிகர் சித்தியின் மகன் தான் நடிகர் டேனியல் பாலாஜி. நடிகர் முரளியை போலவே டேனியல் பாலாஜியும் இளம் வயதில் மரணிப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சினிமாவில் சாவடி அடிப்பாரு ஆனால், நிஜத்துல ஆவடியில் கோயில் கட்டியிருக்காரு நம்ம டேனியல் பாலாஜி என பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதும் தான்

இந்திய குடியரசு கட்சியை புறக்கணிக்கும் பா.ஜனதா – அத்வாலே வேதனை

மும்பை, மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிறிய கட்சியான இந்திய குடியரசு (ஏ) கட்சியும் உள்ளது. எனினும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சிக்கு தொகுதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அந்த கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:- கடந்த பிப்ரவரி மாதம் ஷீரடி, சோலாப்பூர் தொகுதிகளை எங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு கேட்டு இருந்தேன். ஆனால் புதிய கூட்டணி கட்சிகளுக்கு அதிக முக்கியவதும் கொடுக்கப்படுகிறது. எங்கள் கட்சி 12 ஆண்டுகளாக … Read more

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து போராடி தோல்வி

மாட்ரிட், ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து 26-24, 17-21, 20-22 என்று செட் கணக்கில் தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்கிடம் போராடி தோல்வி அடைந்தார். இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ- அஸ்வினி பொன்னப்பா இணை 13-21, 19-21 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் லீ சியா ஹசின்- தெங் சுன் சன் ஜோடியிடம் … Read more

ரஷியாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் – அதிபர் புதின்

மாஸ்கோ, நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3-வது ஆண்டை எட்டிய இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புதின் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், `நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை … Read more

தங்கர் பச்சான் ‘டிக்’ ஆனது எப்படி? – ராமதாஸ் மேடையில் ‘உடைத்து’ பேசிய பு.தா.அருள்மொழி

விருதாச்சலம்: கடலூர் தொகுதி பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சில பின்னணி தகவல்களை வெளியிட்டார் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி. கடலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கும் கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் பங்கேற்றிருந்த நிலையில், முன்னதாக வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி பேசும்போது, “கடலூர் தொகுதியில் கடந்த முறை பாமக வேட்பாளராக … Read more

“பயிற்சி இல்லையெனில், ஏஐ-யை தவறாக பயன்படுத்த வாய்ப்பு”: பில் கேட்ஸ் – மோடி உரையாடல் ஹைலைட்ஸ்

புதுடெல்லி: “முறையான பயிற்சி இல்லாமல் ஒருவருக்கு ஏஐ தொழில்நுட்பம் போன்ற நல்ல விஷயம் கொடுக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.” என்று ஏஐ தொடர்பான ஆபத்துகள் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக்கூறினார். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் உரிமையாளருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து சில மணிநேரங்கள் உரையாடினார். இந்த உரையாடலின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விதித்துள்ளனர். … Read more

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பாஜக தேர்தல் டிக்கெட் கொடுத்ததற்கு தொண்டர்கள் எதிர்ப்பு…

மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பராசத் மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக ஸ்வபன் மஜும்தார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை வேட்பாளராக அறிவித்ததில் இருந்து பாஜக தொண்டர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஸ்வபன் மஜும்தாருக்கு எதிரான சுவரொட்டிகள் கட்சியின் தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட கட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், ஸ்வபன் மஜும்தார் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்றும் அதற்காக கைது செய்யப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. பிரமாண பத்திரத்தில் தன் மீதான … Read more