பிரதமர் ‘ரோடு ஷோ’வில் மாணவர்கள்: ஏப்.3 வரை கடும் நடவடிக்கையை தவிர்க்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஏப்ரல் 3-ம் தேதி வரை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோவையில் கடந்த மார்ச் 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் கலந்துகொண்டனர். … Read more

காங்கிரஸை அடுத்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் – நிலுவை ரூ.11 கோடி

புதுடெல்லி: ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, இன்று ரூ.1,823 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ரூ.11 கோடி வரி பாக்கியில் கடந்த சில ஆண்டுகளாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது பழைய பான் கார்டை பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதமும் அடங்கும். வருமான வரித்துறை நோட்டீஸை … Read more

ஆப்கனில் பெண்களுக்கு கல்லடி, கசையடி தண்டனையை மீண்டும் அமல்படுத்தும் தலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் … Read more

Sunita Kejriwal: முதல்வர் பதவியை குறிவைக்கும் கெஜ்ரிவாலின் மனைவி… மத்திய அமைச்சர் பகீர்!

Sunita Kejriwal News: டெல்லி முதல்வர் பதவியை அடைய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா தயாராகி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடுமையாக சாடியுள்ளார்.

Hot Spot Review: 4 கதைகள், 4 சர்ச்சைகள் – எப்படியிருக்கிறது இந்த `சர்ச்சை' ஆந்தாலஜி படம்?

வாய்ப்பு தேடி வரும் இளம் இயக்குநர், பாடாவதியான கதைகளைக் கேட்டுக் கேட்டு நொந்துபோயிருக்கும் தயாரிப்பாளரிடம் ஒப்புதல் வாங்க, நான்கு வித்தியாசமான கதைகளைச் சொல்கிறார். அந்தக் கதைகளை இயக்குநரின் பார்வையில் நான்கு குறும்படங்களாக ஒரு படமாக இணைத்துக் காட்டும் முயற்சியே இந்த `ஹாட் ஸ்பாட்’. Happy Married Life: ஆதித்யா பாஸ்கரும் கௌரி கிஷனும் காதலர்கள். தங்களின் காதல் குறித்து வீட்டில் தெரிவித்து திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடிவெடுக்கிறார்கள். அடுத்த நாள் அந்த உலகில் கணவன் மனைவியின் ரோல்கள் … Read more

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ

கடந்த வருடம் அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்கிற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான நவீன் பாலிஷெட்டி. இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். இவர் தற்போது அடுத்ததாக 'அனகனகா ஒக ரோஜா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் பகுதியில் பைக் ஓட்டி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராமல் … Read more

Actor Suriya: விஜய்க்கு சொன்ன கதையில் இணையும் சூர்யா?.. கார்த்திக் சுப்புராஜ் சம்பவம் லோடிங்!

சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் இணையவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. சூரரை போற்று படத்தை தொடர்ந்து சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இணைந்தது படத்தின் எதிர்பார்ப்பை

`Second Hand’ என மனைவியை துன்புறுத்திய கணவர்… ரூ. 3 கோடி இழப்பீடு – அதிரடி காட்டிய நீதிமன்றம்

மும்பையில் வசித்து வரும் அமெரிக்க குடியுரிமை கொண்டவருக்கும், இந்தியப் பெண்ணுக்கும் இடையே 1994-இல் அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு 2005-இல் இந்தியா திரும்பிய இத்தம்பதி மும்பை, மட்டுங்காவில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், 2014-இல், அமெரிக்க குடிமகனான கணவர் மட்டும் தனது மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார். மேலும், அவர் 2017-இல் தனது மனைவியை விவாகரத்து செயவதற்காகவும் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து, 2018-இல் கணவர், தன்னை உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் குடும்ப வன்முறை செய்ததாக மனைவி, மும்பையில் உள்ள பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், 2018-இல், அமெரிக்க நீதிமன்றம், அமெரிக்க … Read more

சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன், சுகுமார், ஏழுமலை உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட எங்களை, சீனியாரிட்டி அடிப்படையில் உதவி தாசில்தார்களை நியமிக்க வருவாய் நிர்வாக ஆணையர் … Read more

ஆர்ஜேடி 26, காங். 9, இடது 5 – பிஹாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு

பாட்னா: பிஹார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், இடதுசாரிகள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பிஹார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தையில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் வசமுள்ள பூர்ணா மற்றும் ஹாஜிபூர் தொகுதிகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தின. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஆர்ஜேடி பிரமுகர் ஒருவர் கூறுகையில், … Read more