பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம்

கடந்த வருடம் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் மற்றும் குஷி என இரண்டு படங்கள் தெலுங்கில் வெளியாகின. இதில் குஷி ஓரளவு டீசன்டான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமந்தாவின் 37வது பிறந்த நாளான நேற்று அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஒன்றை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மா இன்டி பங்காரம் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ல் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான பங்காரம் என்கிற படத்தின் டைட்டிலை மீண்டும் … Read more

Vijay: சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் நடக்கும் விஜய்யின் GOAT பட சூட்டிங்.. அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் விஜய் – வெங்கட் பிரபு காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். சயின்ஸ் பிக்ஷன் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். இதில் மகன் கேரக்டருக்காக அவருக்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன்,

`இதே வாடிக்கை…' – பல உணவகங்களில் ரூ.1 லட்சத்துக்கு சாப்பிட்டுவிட்டு கம்பி நீட்டிய தம்பதி!

இங்கிலாந்து நாட்டின் சவுத் வேல் பகுதியில் வசிக்கும் தம்பதியினர், 5 உணவகங்களில் சுமார் 1,000 பவுண்டுகள் (தோராயமாக ரூ.1,04,170.50) மதிப்பிலான உணவைச் சாப்பிட்டுவிட்டு கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளனர்.  அத்தோடு உயர்தர உணவகங்களுக்குச் சென்று அதிக அளவிலான, விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதை தங்களுடைய வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாகப் பிரிட்டனில் 5 பிரபலமான உணவகங்களில் சாப்பிட்ட பிறகு, பணம் தராமல் ஏமாற்றிவிட்டு, அந்த உணவகங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட உணவக தரப்பினர் அளித்த புகாரின் பேரில், உள்ளூர் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில், இத்தகைய … Read more

கோடை வெயிலை சமாளிக்க 100 இடங்களில் குடிநீர் தொட்டிகள் @ கோவை

கோவை: கோடை வெயிலை சமாளிக்கவும், மக்களுக்கு குடிநீர் வழங்கவும் மாநகரின் 100 இடங்களில் குடிநீர் தொட்டிகளை கோவை மாநகராட்சி அமைத்துள்ளது. கோவையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதற்கு முன்பு இல்லாத வகையில், கோவையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பகல் நேரங்களில் வெளியே செல்வதை முடிந்தவரையில் தவிர்த்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோடை வெயிலை சமாளிக்க தேவையான அறிவுரைகளை மருத்துவத்துறையினர் மூலம் அறிவித்துள்ளனர். … Read more

டெல்லி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்குவதில் தாமதம்: அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க தவறிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, மாணவர்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை விரைவில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. … Read more

பெண்கள் குறித்து ஆபாசக் கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

H Raja Case: பெண்களுக்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் ஆபாச கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

DC vs KKR : பிரேசர் மெக்குர்க் -ஐ பிளான் போட்டு காலி செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! ஸ்டார்க் அபாரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 47வது லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் அறிவித்தார். அதன்படி, டெல்லி அணியில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 22 வயதே ஆன அதிரடி வீரர் பிரேசர் மெக்குர்க், பிரித்திவி ஷா ஆகியோர் களமிறங்கினர். இரு அணிகளுக்கும் இடையிலான கடந்த போட்டியே ரன் … Read more

 கடற்கரை வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

சென்னை தற்போது சென்னை கடற்கரை – வேலூர் இடையே செல்லும் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தினசரி சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு பாஸ்ட் உள்ளூர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னைக் கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும். தினமும் வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், … Read more

இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'

மலையாள சினிமாவில் சிறிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் அதன் கதை, திரைக்கதை உருவாக்கத்தால் மிகப்பெரிய வெற்றி பெற்று விடும். அப்படி சமீபத்தில் வெற்றி பெற்ற படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி வெளியாகி கேரளம், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலில் சக்கைபோடு போட்டது. சுமார் 20 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், உலகளவில் 235 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கொடைக்கானல் குணா குகையில் விழுந்தவரை, நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்ற உண்மை … Read more

Thug life: தக் லைஃப் சூட்டிங்கில் தாமதமாக கலந்துக் கொண்ட உலகநாயகன்.. இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளார். இதனால் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது தக் லைஃப் படம். இந்த படத்தின் சூட்டிங் முன்னதாக சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது டெல்லியில் இந்த படத்தின்