பாலஸ்தீன கொடியை தொங்கவிட்ட போராட்டக்குழுவினர்… பைடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொதுவெளியில் நடந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, கல்வி நிறுவனங்களுக்கும் பரவி உள்ளன. அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்கள் போராடி வருகின்றனர். காசாவில் போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், ஆயுத விநியோகம் மற்றும் போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, போராட்டம் நடத்தும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். தடையை மீறி போராட்டங்களில் … Read more

கர்நாடகாவில் காங்கிரஸுக்கு வாக்கு சேகரித்தது ஏன்? – திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அந்த கட்சிக்கு கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மேலிடம் சீட் வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் பெங்களூருவுக்கு வந்தார். அவர் அங்கு விசிக தனித்து போட்டியிடும் பெங்களூரு ஊரகம் மற்றும் மத்திய தொகுதி, கோலார் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்வார் என அக்கட்சியினர் மிகவும் … Read more

ஹெலிகாப்டர் இருக்கையில் தவறி விழுந்த மம்தா @ தேர்தல் பிரச்சார பயணம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. திரிணமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல ஹெலிகாப்டரில் ஏறும்போது நிலை தடுமாறி விழுந்தார். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. நேற்று மதியம் அசான்சோல் தொகுதியில் … Read more

தனியார் வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை…

தனியார் வாகனங்களில் உள்ள வாகன பதிவெண் தகடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் என பலரும் தங்கள் வாகனத்தில் பத்திரிக்கை, தலைமைச் செயலகம், போலீஸ், மின்துறை, டி.என்.இ.பி., சென்னை மாநகராட்சி, ஜி.சி.சி., மற்றும் ராணுவத்தினர் தங்கள் துறையைக் குறிக்கும் சின்னங்கள் ஆகியவற்றை தங்கள் வாகன நம்பர் பிளேட்டிலும் வாகனத்தின் வேறு பகுதியிலும் ஒட்டுகின்றனர். அரசாங்க தொடர்புடைய சின்னங்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதால் … Read more

ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ!

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகின்றார். தெலுங்கு படங்களை தொடர்ந்து கடந்த வருடத்தில் விஜயை வைத்து தமிழில் முதல் முறையாக 'வாரிசு' என்கிற படத்தை தயாரித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கு, தமிழ் படங்களை தொடர்ந்து இப்போது ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் படத்தை தயாரிக்க களம் இறங்குகிறார். இந்த படத்தை வம்சி பைடப்பள்ளி இயக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிக்க முதற்கட்டமாக சாஹித் கபூர் … Read more

ஓடிடி ஓர் அபாயம்.. புதிய படங்களுக்கு செக் வைக்கும் பெரிய நிறுவனங்கள்.. பிஸ்மி குற்றச்சாட்டு!

சென்னை: புதிய படங்கள் தியேட்டருக்கு வரும் தேதியையே தற்போது முடிவு செய்யும் இடத்துக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்து விட்டதாக பகீர் கிளப்புகிறார் பத்திரிகையாளர் பிஸ்மி. அவர் தனது யூடியூப் சேனலில் ஓடிடி நிறுவனங்கள் எப்படி எல்லாம் தமிழ் சினிமாவை காலி செய்கின்றன என ஒரு வீடியோ வெளியிட்டு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். தியேட்டர்களுக்கு மக்களை வரவிடாமல்

திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா அவ்வப்போது சந்தித்து வருகிறார். அது மட்டுமல்லாது அமைச்சர்கள் மாநில முதல்-மந்திரிகள் ஆகியோர் கெஜ்ரிவாலை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி … Read more

நிவாரண நிதியில் பிரதமர் மோடியை துவைத்தெடுக்கும் ஸ்டாலின், தட்டிக் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பட்டும் படாமலும் விமர்சனம் செய்திருக்கிறார். Source … Read more