9 இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக பதிவான வெப்பநிலை: அடுத்த 3 நாட்கள் எப்படி?

சென்னை: அடுத்த 3 தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்தி, தருமபுரி, திருத்தணி, … Read more

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் லவ்லி ராஜினாமா

புதுடெல்லி: டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை அவர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிவைத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்ததை எதிர்த்து ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள7 லோக்சபா மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 25 அன்று நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கேஜ்ரிவால் சிறையில் இருக்கிறார். … Read more

டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் ராஜினாமா

டெல்லி அரவிந்த் சிங் டெல்லி மாநிலம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். தற்போது நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதியும், 2 ஆம் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதியும் வரும் 7, 13, 20,25  ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட … Read more

முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர்

‛சீதா ராமம்' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: காதல் போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்க எனக்கு வசதியாக இல்லை. நான் பயப்படுவேன். அதை எனது பெற்றோரும் ஏற்கவில்லை. நான் ஒரு படத்தில் நடிக்க விரும்பிய போது, அதில் முத்தக் காட்சி சம்பந்தப்பட்டிருந்ததால் நான் விலக வேண்டியிருந்தது. ஒரு நடிகராக, நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் சில நேரங்களில் அது படத்திற்கு தேவையாக இருக்கும். உங்களுக்கு … Read more

அரசை எதிர்த்தால் சும்மா இருப்பார்களா?.. விஷாலின் ‘ரத்னம்’ வீழ்ச்சி.. பழி தீர்த்த பயில்வான் ரங்கநாதன்

சென்னை: ரத்னம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பயில்வான் ரங்கநாதன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என நடிகர் விஷால் விரட்டி அடித்த நிலையில், தொடர்ந்து விஷால் குறித்து தனது வீடியோக்களில் பேசி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். புதிதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ரத்னம் படம் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் வெளியாகாமல் போனதற்கு விஷால் தான்

CSK v SRH : `இது முத்துப்பாண்டி கோட்டை!' – சன்ரைசர்ஸை சேப்பாக்கத்தில் சாய்த்த சென்னை பாய்ஸ்!

சென்னை அணிக்கு அதன் கோட்டையில் இன்னொரு ஆட்டம். இன்னொரு வெற்றி சாத்தியப்பட்டிருக்கிறது. பயமுறுத்திக் கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணியை டார்கெட்டை டிபண்ட் செய்து சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சௌகர்யமாக வீழ்த்தியிருக்கிறது. CSK v SRH போட்டிக்கு முன்பே சன்ரைசர்ஸ் அணியின் மீது ஒரு பிரமிப்பும் மிரட்சியும் இருந்தது. அதுவே சென்னை அணிக்கு ஒரு அழுத்தமாகத்தான் இருந்தது. வழக்கம்போல டாஸை தோற்று நின்றார் கேப்டன் ருத்து. பேட் கம்மின்ஸ் சேஸிங்கைத் தேர்வு செய்தார். இரண்டாம் பாதியில் சேப்பாக்கத்தில் … Read more

குஜராத்தில் மீண்டும் மீண்டும் பிடிபடும் போதை பொருட்கள்

குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோர காவல்படை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் பாகிஸ்தானியர்கள் கைதாகினர். Source link

மே 5-ல் நடைபெறும் மாநாடு வணிகர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்: விக்கிரமராஜா நம்பிக்கை

திருப்பத்தூர்: மதுரையில் வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ள வணிகர் தின மாநில மாநாடு வணிகர்களுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தார் மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் சி. கிருஷ்ணன் உருவப் பட திறப்பு விழா ஆம்பூரில் இன்று (ஏப்.28) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா … Read more

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: குழந்தைகள், பெண்கள் வெளியேற்றப்படுவதாக போலீஸ் தகவல்

இம்பால்: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் தலைநகரின் இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இரண்டு குழுக்களின் கிராம தன்னார்வலர்களுக்கும் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) துப்பாக்கிச் சண்டை நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “காங்போக்பி மாவட்டத்தில் இம்பால் பள்ளத்தாக்கின் மலைப்பகுதியில் உள்ள கவுட்ரூர் கிராமத்தில பல்வேறு ஆயுதம் தாங்கியவர்கள் கண்மூடித்தனமாக ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டனர். இதில் சில குண்டுகள் கிராமவாசிகளின் வீட்டுச் சுவர்களை துளைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. Source link

மே 10 ஆம் தேதி உதகையில் மலர்க் கண்காட்சி தொடக்கம்

உதகமண்டலம் உதகமண்டலத்தில் வரும் 10 ஆம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இங்குக் கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாலும். இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி எப்போது தொடங்கும் எனச் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து வந்தனர். மே-17-ஆம் தேதி மலர் கண்காட்சி தொடங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  தற்போது, … Read more